Ku.Ka.Selvam as DMK head office secretary: கு.க.செல்வத்துக்கு திமுகவில் மீண்டும் பதவி

சென்னை: Ku.Ka.Selvam who left the BJP and rejoined the DMK, has been given the post. பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வத்துக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

கு.க.செல்வம் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நெருங்கி பழகியவர். கடந்த 2016ம் ஆண்டு சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ.,வாக வெற்றி பெற்றார். திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமை நிலைய அலுவலக செயலாளராக ஏற்கெனவே கு.க.செல்வம் பதவி வகித்து வந்தார். பின்னர் கட்சி பதவி விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த அவர், திடீரென டெல்லி சென்று அப்போதைய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மூலம் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார்.

அப்போது திமுகவையும் விமர்சித்து பேசி வந்தார். பின்னர், திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி உத்தரவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர் 2020-ல் பாஜகவில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார். பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார்.

ஆனால் பாஜகவில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் அவர் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் பா.ஜ.கவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வம் திமுகவின் தலைமை நிலைய அலுவலக செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திமுகவில் விளையாட்டு மேம்பாட்டு அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளராக தயாநிதிமாறன் எம்.பி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவராக அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக அமைப்புச் செயலாளராக ஆர்.எஸ்.பாரதி, இணை அமைப்புச் செயலாளராக அன்பகம் கலை ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சட்ட ஆலோசகராக வில்சன், சட்டத்துறை தலைவராக விடுதலை, கொள்கை பரப்பு செயலாளராக திருச்சி சிவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.