Chief Minister’s Spokesperson Gurulingaswamy : கர்நாடக முதல்வரின் செய்தி தொடர்பாளர் குருலிங்கசாமி மாரடைப்பால் காலமானார்

பெங்களூரு: Karnataka Chief Minister’s Spokesperson Gurulingaswamy passed away : கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் செய்தி தொடர்பாளர் குருலிங்கசாமி மாரடைப்பால் திங்கள்கிழமை காலமானார்.

மூத்த பத்திரிகையாளரும், முதல்வர் பசவராஜ் பொம்மையின் செய்தி தொடர்பாளருமான குருலிங்கசாமி (47) (Gurulingaswamy) திங்கள்கிழமை மாரடைப்பால் காலமானார். அவருக்கும் மனைவி உள்பட 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இன்று காலை உடற்பயிற்சி செய்ய உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று, அவர் பயிர்சியில் ஈடுபட்டிருந்தப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே உயிரிழந்தாக தெரிவித்தனர். உடற்பயிற்சியின் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மரணமடைந்த குருலிங்கசாமியின் உடல் திங்கள்கிழமை பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பெலகாம் மாவட்டம் ராமதுர்காவில் (Ramadurga in Belgaum district) இறுதிச் சடங்கு நடைபெறுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்த குருலிங்கசாமி, அதற்கு முன்பு பசவராஜ் பொம்மை உள்துறை அமைச்சராக பதவி வகித்தப் போது, அவரது தனிச் செயலாளராக பணியாற்றி வந்தார். அதற்கு முன்பு ஈ டிவி, விஜயவாணி, டிவி 5 (E TV, Vijayavani, TV 5) ஆகிய ஊடகங்களில் பணியாற்றி உள்ளார். முதல்வரின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்த போதும், அனைவரிடமும், நெருக்கமாகவும், அன்பாகவும், எளிமையாகவும் நடந்து கொண்டார். அவர் ஊடகத்தினருடன் நெருக்கம் பாராட்டி, தேவையான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வந்தார். முதல்வர் பசவராஜ் பொம்மை அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி, ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தார்.

இறந்த குருலிங்கசாமியில் உடலுக்கு அமைச்சர்கள் சி.என்.அஸ்வத் நாராயணா, முருகேஷ் நிராணி, கோவிந்தகார்ஜோள், கே.கோபாலையா, பி.சி.பாட்டீல், முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி (Ministers CN Aswath Narayana, Murugesh Nirani, Govindakarjol, K. Gopalaya, PC Patil, Former Chief Minister HD Kumaraswamy), பெங்களூரு பத்திரிகையாளர் சங்கம், பணியில் உள்ள‌ செய்தியாளர்கள் சங்கம், செய்தியாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தங்களது நெருங்கிய நண்பரை இழந்ததால், பெங்களூரு பத்திரிகையாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.