Kallakurichi Riots: கலவரத்தில் களவாடப்பட்ட பொருட்கள் இரவோடு இரவாக மரத்தடியில் வைப்பு

பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெஞ்ச், நாற்காலிகள்.

கள்ளக்குறிச்சி: Kallakurichi people have brought tables and chairs overnight: கள்ளக்குறிச்சி அருகே பள்ளியில் நடந்த கலவரத்தின்போது, மக்கள் எடுத்துச்சென்ற மேஜை, நாற்காலிகளை இரவோடு இரவாக கொண்டுவந்து வைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த 12ம் தேதி மர்மமான முறையில் 12ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். இதனையடுத்து மாணவியின் மரணத்தில் சந்தேகம் (Student Death mystery) இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி வந்த நிலையில், கடந்த 17ம் தேதி பள்ளி வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் (Protest) கலவரமாக மாறியது.

இதில் 2000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தி தனியார் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து அங்கிருந்த வாகனங்கள், பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி சூறையாடியதோடு, தீ வைத்தும் கொளுத்தப்பட்டது.

இந்த கலவரத்தை பயன்படுத்தி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளிக்குள் இருந்த மேஜை, நாற்காலிகள், டேபிள், பென்ச், சமையல் பாத்திரங்கள், ஏசி இயந்திரங்கள் மற்றுமு் கணினிகள் என கையில் கிடைத்தவற்றை எடுத்துச் சென்றனர்.

இதனைத்தொடர்ந்து கலவரம் நடைப்பெற்ற போது தனியார் பள்ளியில் இருந்த எடுத்து செல்லப்பட்ட பொருட்களை எல்லாம் பள்ளி வளாகம் அருகே எடுத்து வந்து போட்டு விட்டு செல்லுமாறு, சின்னசேலம் வருவாய் துறை அதிகாரிகளின் ஏற்பாட்டின் படி பள்ளியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், பள்ளியை சுற்றியுள்ள கனியாமூர், விளங்கம்பாடி, வினைத்தீர்த்தாபுரம், இந்திலி உள்ளிட்ட கிராம மக்கள், கலவரம் நடக்கும் போது பொருட்களை தூக்கிச் சென்ற பொருட்களை கொண்டு வந்து பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் இரவோடு இரவாக போட்டுவிட்டு சென்றுள்ளனர்.