B.Y Vijayendra Contest in Shikaripura Constituency : ஷிகாரிபுரா தொகுதியில் பி.ஒய்.விஜயேந்திரா போட்டி: முன்னாள் முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு : Former Chief Minister Yeddyurappa announced : க‌ர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் 2023ல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பே, கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார். அடுத்து நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஒய்.விஜயேந்திரா போட்டி இடுவார். நான் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நான் ஷிகாரிபுரா தொகுதியில் இனி போட்டியிட மாட்டேன். எனது மகன் பி.ஒய். விஜயேந்திரா இந்த தொகுதியில் போட்டியிடுவார். விஜயேந்திரா பழைய மைசூரு பாக‌த்தில் (old Mysore part) உள்ள தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினரின் விருப்பமாக‌ இருந்தது. ஆனால் நான் ஷிகாரிபுரா தொகுதி போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதால், சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பி.ஒய். விஜயேந்திரா வெளியிட்டு செய்தி குறிப்பு: எனது தந்தையின் முடிவுக்கு எந்த காரணமும் இல்லை. இது அவரது சொந்த விருப்பம். எனது தந்தை தேர்தலில் போட்டியிட வில்லை என்றாலும், பாஜக கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவார் (He will strive for the development of the party). என் தந்தையில் விருப்பப்படி இந்த தொகுதியில் போட்டியிட்டாலும், பழைய மைசூரு பாக‌த்தில் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்த தொகுதியில் மட்டுமின்றி வேறு எந்த தொகுதியில் கட்சியினர் போட்டியிடுமாறு கூறினாலும், நான் அதற்கு தயாராக உள்ளேன். இங்கு மட்டுமின்றி, கட்சியை மாநிலம் முழுவதும் பலப்படுத்துவேன். கட்சி ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் (Whether the party is in power or not), கட்சியின் வளர்ச்சிக்காக தொடந்து பாடுபடுவேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.