AjithKumar back to chennai: போட்டோ எடுக்க கூப்பிட்ட ஏர்போர்ட் அதிகாரிகள்: சிரித்துக் கொண்டே வந்த அஜித்

சென்னை: Actor AjithKumar back to chennai: நடிகர் அஜித்குமார் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பினார்.

தற்போது ஹெச் வினோத் மற்றும் போனிகபூருடன் இணைந்து ‘ஏகே61’ (AK61) படத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வருகிறார். இவர்களின் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து இது 3வது படமாகும். இந்த படம் வரும் தீபாவளியன்று (Deepavali Festival) வெளியாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், டிசம்பரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு (Ajithkumar movie Shooting) ஐதராபாத்தில் பிரமாண்ட செட்களுடன் நடைபெற்றன. வங்கி கொள்ளை சம்பவத்தை மையமாகக்கொண்டு உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு மவுண்ட் ரோடு பகுதியில் வங்கிகள் போன்ற செட்கள் போடப்பட்டு விருவிருப்பாக நடைபெற்றன.

இதனிடையே சிறிது இடைவெளியாக நடிகர் அஜித்குமார் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் (Chennai International Airport) வந்த அவரை, விமான நிலைய அதிகாரிகள் போட்டோ எடுக்க அழைத்தபோது, நடிகர் அஜித்குமார் சிரித்துக்கொண்டே வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

படத்தின் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், புனே அல்லது சென்னையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.