Bommai Nayagi First Look: யோகிபாபுவின் ‘பொம்மை நாயகி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

சென்னை: Yogi Babu’s Bommai Nayagi First Look Released: நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளையொட்டி ‘பொம்மை நாயகி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (FirstLook) போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

நடிகர் யோகி பாபு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து தற்போது முன்னணி காமெடி நடிகராக (Comedy Actor) பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். காமெடி நடிப்பு மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் நடித்து வெளிவந்த படங்கள் நல்ல வெற்றியை பெற்றுள்ளன. இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் பா ரஞ்சித்தின் (Pa.Ranjith) நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொம்மை நாயகி’ திரைப்படத்தில் யோகி பாபு நடித்து வருகிறார். இந்த படத்திற்கு கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா ஆர்.கே. எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் யோகி பாபுவின் பிறந்த நாளான (Yogi Babu Birthday) ஜூலை 22-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.