Introduction of 10 kg cylinder with modern security: நவீன பாதுகாப்புடன் கூடிய 10 கிலோ சிலிண்டர் அறிமுகம்

தருமபுரி: Introduction of 10 kg cylinder with modern security. தருமபுரியில் நவீன பாதுகாப்புடன் கூடிய 10 கிலோ சிலிண்டர் முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் பாதுகாப்பு அம்சங்களுடன் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 10 கிலோ காம்போசிட் எரிவாயு உருளையின் முதல் விற்பனையினை தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தொடங்கி வைத்தார்கள்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் பாதுகாப்பு அம்சங்களுடன் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 10 கிலோ காம்போசிட் எரிவாயு உருளையின் முதல் விற்பனையினை தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தொடங்கி வைத்தார்கள்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் பாதுகாப்பு அம்சங்களுடன் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 10 கிலோ காம்போசிட் எரிவாயு உருளையின் (கேஸ் சிலிண்டர்) விற்பனை தருமபுரி மாவட்டத்தில் ராஜலட்சுமி இண்டேன் கேஸ் ஏஜென்சிஸ் விநியோகஸ்தர் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. இதனை முன்னிட்டு 10 கிலோ காம்போசிட் எரிவாயு உருளையின் முதல் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

காம்போசிட் எரிவாயு உருளை தோற்றத்தில் அழகாகவும் எல்லோராலும் எளிதில் கையாள கூடியதாகவும் உள்ளது. இந்த எரிவாயு உருளை வெடிக்கும் தன்மை அற்றது, (BLAST PROOF) பைபர் மெட்டீரியலால் உருவாக்கப்பட்டுள்ளது. நிரப்பப்பட்ட எரிவாயு உருளையின் அளவு மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட எரிவாயு அளவு ஆகியவற்றை எளிதில் பார்க்கும் வசதி உடையது.

காம்போசிட் எரிவாயு உருளைக்கு (சிலிண்டர்) முன்வைப்பு (டெபாசிட்) தொகை ரூ.3,350 மட்டும் ஆகும். 10 கிலோ காம்போசிட் எரிவாயு உருளையின் (கேஸ்) இணைப்பு தேவைப்படும் பொதுமக்கள் தருமபுரியில் உள்ள ராஜலட்சுமி கேஸ் ஏஜென்சிஸ் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 10 கிலோ காம்போசிட் எரிவாயு உருளையில் மேற்குறிப்பிட்டுள்ள சிறப்பு அம்சங்கள் உள்ளன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெ.ஜெயக்குமார், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஓசூர் பகுதி விற்பனை அலுவலர் கிரண், தருமபுரி ராஜலட்சுமி இண்டேன் கேஸ் ஏஜென்சிஸ் விநியோகிஸ்தர் ஞான வடிவேல் குமரன், மேலாளர் வில்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.