Direct Selection for the post of Veterinary Consultant: கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடித் தேர்வு

நாமக்கல்: Direct Selection for the post of Veterinary Consultant. கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடித் தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) தற்போது 516 பிரதம சங்கங்களின் மூலம் தினசரி சராசரியாக 1,43,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து, பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருகிறது.

தமிழக அரசு தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும் கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகள் கிடைத்திடவும் அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் வளம் பெற்றிடவும், முனைப்புடன் திட்டங்களை செயலாற்றி வருகின்றது. அதன்படி கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பெற்று தற்போது இருக்கும் கால்நடை மருத்துவர்களுடன் காலியாக உள்ள 1 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு ஒன்பது மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட, அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் (வயது வரம்பு – ஐம்பது வயதிற்குள்) தங்களை பற்றிய முழுமையான விவரங்களுடனும், உரிய பட்ட படிப்பு கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் 13.10.2022 (வியாழக்கிழமை) அன்று நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ள காலை 11 மணிக்கு பொதுமேலாளர், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், E.B.காலனி(அஞ்சல்), பரமத்தி ரோடு, நாமக்கல் – 637 001 என்ற முகவரிக்கு அழைக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.