Bangalore Traffic on August 15 : ஆகஸ்ட் 15 அன்று பெங்களூரில் சாலைக்கு வருவதற்கு முன் இந்த செய்தியைப் படியுங்கள்

சுதந்திர தினத்தன்று எந்தெந்த நேரத்தில் எந்தெந்த சாலைகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து மாநகர போக்குவரத்து போலீசார் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் இங்கே.

பெங்களூரு: Independence day Bangalore Traffic Information: ஆகஸ்ட் 15ம் தேதி 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபயண நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அச்சம் காரணமாக மாநகர காவல் துறை போக்குவரத்து முறையில் பல மாற்றங்களை செய்துள்ளது.

சுதந்திர தினத்தன்று எந்தெந்த நேரத்தில் எந்தெந்த சாலைகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து மாநகர போக்குவரத்து போலீசார் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் இங்கே.

போக்குவரத்து காவல்துறை ஆணையர் வெளியிட்டுள்ள போக்குவரத்து சுற்றறிக்கையில்,

ஹெசர‌கட்டா பிரதான சாலையில் (Hesaragutta Main Road) காலை 6.30 மணி முதல் 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் செல்வது நல்லது.

எச்எம்டி சாலையில் காலை 7 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

வாட்டாள் நாகராஜ் சாலை, ராஜ்குமார் சாலை (Rajkumar Road), தும்கூர் சாலை, சேஷாத்திரி சாலை ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

நிருபதுங்கா ரோடு, என்ஆர் ரோடு, ஜேசி ரோடு (JC Road), ஜிடி ரோடு, எல்பிடி ரோடு, கேஜி ரோடு, காந்தி நகர் 5வது மெயின் ரோடு ஆகிய இடங்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை செல்ல வேண்டாம் என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

மதியம் 12 மணி முதல் 3 மணி வரை ஆனந்த் ராவ் சர்க்கிள் (Anand Rao Circle) முதல் சுபேதார் சத்திரம் சாலை, கூட் ஷெட் ரோடு டி.சி.எம் ராயன் சாலை, மெஜஸ்டிக் பிளாட்ஃபார்ம் சாலை முதல் சங்கொல்லி ராயண்ணா வட்டம் வரை, பின்னிபேட்டை – புளியமர‌ சந்திப்பு முதல் குட் ஷெட் சாலை, டேங்க் பண்ட் சாலை, சேஷாத்ரி சாலை, சவுத் எண்ட் சாலை முதல் லால் பாக் பாஸ்கிம் கேட், மினர்வா வட்டம் முதல் டவுன்ஹால் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை, ஷேஷமால் சந்திப்பு முதல் ராமகிருஷ்ணா ஆசிரமம் (Ramakrishna Ashram) வரையிலான சாலைகள், புல் டெம்பல் சாலை மஞ்சுநாத கல்யாண மண்டபத்தில் இருந்து உமா தியேட்டர் வரை, கேஆர் சாலை டிஏஎம் சந்திப்பில் இருந்து சிவசங்கர் சதுக்கம் வரை, ஹோம் ஸ்கூல் சந்திப்பில் இருந்து தியாகனக் சாலை, வாசவி சாலை மற்றும் நேஷனல் கல்லூரி சாலை வழியாக வாகனங்களை பயன்படுத்த வேண்டாம்.

இது தவிர, சென்ட்ரல் தெரு, அனில் கும்ப்ளே சர்க்கிள் முதல் சிவாஜிநகர் (Shivajinagar), கப்பன் ரோடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மானேக்ஷா அணிவகுப்பு திடலில் (Maneksha parade ground) நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பாஸ் வைத்திருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கு கப்பன் சாலையின் மூன்றாவது கேட் உள்ளிட்ட சில இடங்களில் வாகனங்களை நிறுத்தம் செய்ய‌ வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பெங்களூரு போக்குவரத்து போலீஸ் ஆணையர் பிறப்பித்துள்ளார்.