Chennai Chief Secretariat area: சென்னை தலைமைச் செயலகப் பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்

Image credit: Twitter.

சென்னை: Change of traffic tomorrow in Chennai Chief Secretariat area : சென்னை தலைமைச் செயலகப் பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு (Traffic Division of Police) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை தலைமை செயலகத்தில் ஆக. 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி, திங்கள்கிழமை காலை 6 மணி முதல் நிகழ்ச்சிகள் முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி உழைப்பாளர் சிலை முதல் ரிசர்வ் வங்கி (Reserve Bank), சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையும், கொடிமரச்சாலையிலும் அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் தவிர வேறு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

காமராஜ்சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரி முனை நோக்கிச் செல்லும் வாகனங்களும், வாலாஜா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் (Raja Annamalai Mandram), வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்தடையலாம்.

பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக, காமராஜர் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்ற சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை (Anna street) மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.

அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனைச் செல்லும் வாகனங்கள், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக பாரிமுனை சென்றையலாம். முத்துசாமி சாலையில் இருந்து கொடிமரச் சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை (Wallaja Road) வழியாக காமராஜர் சாலைக்கு செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை 75 வது சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் (M. K. Stalin) தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்த உள்ளார். இதில் அமைச்சர்கள் உள்பட, அதிகாரிகள், ஊழியர்கள், அனுமதிக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதன் காரணமாக தலைமை செயலகம் அமைந்துள்ள பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.