Increase in water flow in Okanekal : தமிழகம் ஒகனேக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பு

தர்மபுரி: Increase in water flow in Tamil Nadu Okanekal : கர்நாடகம், கேரள மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், தமிழகம் ஒகனேக்கல்லில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடகம், கேரள மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ், கபினி அணைகள் நிரம்பி வழிகின்றன (KRS and Kabini dams are overflowing). இதனையடுத்து தமிழகம் ஒகனேக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை ஒகனேக்கல்லுக்கு வியாழக்கிழமை நீர்வரத்து 2.50 லட்சம் கன அடியாக இருந்தது. இதனையடுத்து மேட்டூர் அணையும் நிரம்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து 2.1 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கர்நாடக, கேரள மாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனையடுத்து காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் எல்லைப்பகுதிகளில் உள்ள அஞ்செட்டி, பிலிகுண்டுலு (Anchetty, Bilikundulu), மொசல் மடுவு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஒகனேக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி மத்திய நீர்வளத்துறை ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

வியாழக்கிழமை காலை 1.80 லட்சமாக இருந்த தண்ணீர் வரத்து மாலை 2.50 லட்சம் கன அடியாக உயர்ந்தது. இதனால் ஒகனேக்கல்லில் உள்ள அருவில் அனைத்தும் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் மூழ்கின. அங்குள்ள தொங்கும் பாலத்தை வெள்ளம் தொட்டப்படி ஓடுகிறது. ஒகனேக்கல் கரையோரப் பகுதிகளான ஆலாம்பாடி, ஊட்டமடை சந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ள அபாயம் சூழ்ந்துள்ளது. நூற்றாம்பாளையம் செல்லும் சாலை துண்டிக்கபட்டது. கூட்டுக் குடிநீர் திட்டம் (Joint Water Scheme has been stopped) மூலம் செலுத்தப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகனேக்கல்லில் சுற்றுலாப்பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகனேக்கல்லில் உள்ள பிரதான அருவிக்கு செல்லும் பாதை, ஆலம்பாடி, முதலை பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த்துறையினர் (Revenue Department), தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படுவதால், அணையோரம் உள்ள சங்கிலி முனியப்பன் கோவில் சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து அங்கு தடுப்பு வேலியை போலீசார் அமைத்துள்ளனர். செங்கானூர் நவப்பட்டி, நாட்டாமங்கலம் பகுதியில் வாழை, தென்னை, பருத்தி(Banana, coconut, cotton) உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அண்ணாநகர், பெரியார் நகர், பழைய சந்தை ஆகிய பகுதிகளில் வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால், அங்கு வசிக்கும் மக்களை வருவாய்த்துறையினர் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைத்துள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மேட்டூர் சார் ஆட்சியர் வீரபிரதாப் சிங் வியாழக்கிழமை பார்வையிட்டார். மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவமும் பார்வையிட்டார். மேட்டூர் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் காவிரி கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. கோட்டையூர், பண்ணவாடி பரிசல்துறைகளில் படகுகள், பரிசல் ஆகியவற்றை இயக்கவும், மீன் பிடிக்கவும் தடை (Fishing is also prohibited) விதிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகம், தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை இன்னும் ஓரிரு நாள்களுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், காவிரியில் அதிக அளவில் நீர் வரத்து இருக்கும் எனக் கருத்தப்படுவதால், தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை கர்நாடக, தமிழக அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.