Chief Minister M. K. Stalin : மழைக்கு நெல் மூட்டைகள் சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: Paddy bundles should be protected from rain damage : மழை வெள்ளத்திற்கு அறுவடை செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் பாதிக்கப்படாத வகையில் தார்ப்பாய்கள் கொண்டு மூட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி மூலம் திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஈரோடு, திருவாரூர், கடலூர், திருப்பூர் (Trichy, Karur, Salem, Namakkal, Thanjavur, Ariyalur, Mayiladuthurai, Nagapattinam, Erode, Tiruvarur, Cuddalore, Tirupur) மாவட்ட ஆட்சியர்களுடன் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் வெள்ள நீரை எதிர்க் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் அறுவடை செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் பாதிக்கப்படாத வகையில் தார்ப்பாய்கள் கொண்டு மூட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் நீலகிரி, கோயம்பத்தூர், மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தேடும்பணி, மீட்பு, நிவாரணப் பணிகளை (Search, rescue and relief operations) மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டும். இதனையொட்டி நீலகிரி, கன்னியாக்குமரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் தேசிய மீட்புப் படையின் 2 குழுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தேசிய மீட்புப்படையின் 2 குழுக்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையின் ஒரு குழுவும், திருச்சி செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 40 வீரர்களை கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையின் (Tamil Nadu Disaster Response Force) 2 குழுக்கள் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழையால் ஏற்படும் வெள்ளத்திற்கு பயிர்சேதம் ஏற்பட்டால் உடனடியாக கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் நேரில் சென்று நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய அறிவிப்பு தராமல் எதிர்பாராத நேரத்தில் அதிக தண்ணீரை வெளியேற்றக்கூடாது. பாதுகாப்பான இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களும், கரையோரப்பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் (All levels of officers should be involved in coastal patrolling). நெல்மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பாக தார்பாய்கள் கொண்டு மூட வைக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் (Ministers Duraimurugan, K.K.S.S.R.), தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையாளர் எஸ்.கே.பிரபாகர் நீர்வாக ஆணையாளர் எஸ்.கே.பிரபாகர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பனீந்திரரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அண்மையில் தொடர்ந்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதோடு கனமழைக்கு முன்பே அறுவடை செய்யப்பட்டு அரசு கிடங்குகளில் (government warehouses)வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை மழை வெள்ளத்தால் சேதமடைவதாக வந்த தகவலையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், நெல் மூட்டைகளை பாதுகாக்க வலியுறுத்தி உள்ளார்.