CM Basavaraj bommai : கொலை குற்றவாளிகளை ஒடுக்கும் வரை ஓயமாட்டேன்: முதல்வர் பசவராஜ் பொம்மை

பெங்களூரு : I will not rest until the murder culprits are suppressed : சமூகத்தில் வன்முறையையும், அமைதியின்மையையும் ஏற்படுத்திய கொலை குற்றவாளிகளை ஒடுக்கும் வரை ஓயப்போவதில்லை என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள தனது இல்லத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: நேற்று மங்களூருவில் பிரவீன் நெட்டாரு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து கேரள மாநில காவ‌ல்துறையுடன் (Kerala State Police) தொடர்பில் இருந்து வருகிறோம். மங்களூரு, காசர்கோடு காவல் கண்காணிப்பாளர்களிடம் இது தொடர்பாக‌ பேசி உள்ளேன். கர்நாடக காவல் டிஜிபி மற்றும் காவல் கேரள டிஜிபி ஆகியோரிடமும் பேசினேன். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முத்த போலீஸ் அதிகாரியை வரவழைக்கப்பட்டு முழுமையான தகவல் பெறப்பட்டது. கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

மேலும் மங்களூரு, டி.ஜே.ஹள்ளி, ஷிவமொக்கா (Mangalore, DJ Halli, Shivamogga)போன்ற முந்தைய வழக்குகளைப் போல்குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன். மேலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள நபர்கள் மற்றும் அமைப்புகள் யாராக இருந்தாலும் அவர்களை அழிக்கும் பணி மேற்கொள்ளப்படும். இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களைத் துன்புறுத்தாமல் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டுமாறும், ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிடாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ர் வேண்டுகோள் விடுத்தார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க தயங்க மாட்டோம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாஜக இளைஞரணித் தலைவர் பிரவீன் நெட்டாரு கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது (8 people were arrested) செய்யப்பட்டுள்ளதாக கன்னட நியூஸ் நவ் தெரிவித்துள்ளது. அண்மையில் பெல்லாரேயில் காசர்கோட்டைச் சேர்ந்த மசூத் என்பவர் அற்ப காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்டார். மசூத்தை அபிலாஷ், சுனில், சுதிர், சிவா, ரஞ்சித், சதாசிவா, ஜிம் ரஞ்சித், பாஸ்கர் ஆகியோர் தாக்கினர். ஜூலை 19-ஆம் தேதிய‌ன்று, மசூத், சுதீரின் கையைத் தொட்டதால் ஏற்பட்ட கை க‌லப்பு மசூத்தின் மரணத்தில் முடிந்தது. மசூத்தின் தலையில் பாட்டிலால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணத்திற்கு பழிவாங்கும் வகையில் பாஜக பிரமுகர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணித் தலைவர் பிரவீன் நெட்டாருவின் கொலையைக் கண்டித்து புத்தூர், பெல்லாரே, சூளையா, கடபா ஆகிய பகுதிகளில் இந்து அமைப்புகள் சுயமாக முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தன. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புத்தூர், பெல்லாரே, சுள்யா முழு அடைப்பு நடத்தப்பட்டதோடு, பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. உள்துறை அமைச்சர் (home Minister) அரக ஞானேந்திரா, பிரவீன் நெட்டாருவின் கொலைக்குப் பின்னால் மதவெறி சக்திகள் இருப்பதாகக் தெரிவித்தார். மேலும் மாநிலத்தில் இது போன்ற கொலைகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. கொலைக் குற்றவாளிகளை விரைவில் போலீஸார் கைது செய்வார்கள். அவர்களுக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்படும் என்றார்.