Special Trains Tirunelveli-Thambaram: திருநெல்வேலி- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை: Special trains between Tirunelveli-Thambaram with special fare.: திருநெல்வேலி- தாம்பரம் இடையே சிறப்பு கட்டணத்திலான சிறப்பு ரயில்களை ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தேசிய ரயில் பயணியர் வசதிகள் மேம்பாட்டு குழுவினர், ஐந்து நாட்கள் சுற்றுப் பயணமாக, கடந்த 24ம் தேதி தமிழகம் வந்தனர்.

குழுவின் தலைவர் பி.கே. கிருஷ்ணதாஸ் தலைமையில், கே.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 12 உறுப்பினர்களும், காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார் பேட்டை ஆகிய ஐந்து ரயில் நிலையங்களில் 25ம் தேதி ஆய்வு மேற்கொண்டனர். பயணியருக்கு தற்போதுள்ள வசதிகள், மேம்படுத்த வேண்டிய வசதிகள் மற்றும் இதர கோரிக்கைகள் குறித்து பயணியரிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப்பின் தேசிய ரயில் பயணியர் வசதிகள் மேம்பாட்டு குழு உறுப்பினர் கே.ரவிச்சந்திரன் கூறுகையில், ரயில் நிலையங்களில் பயணியருக்கான வசதிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். சில ரயில்களுக்கு கூடுதல் நிறுத்த வேண்டும். கொரோனா பாதிப்பின்போது நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும், மீண்டும் முழுமையாக இயக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

பயணியரின் கோரிக்கைகளை அறிக்கையாக தயாரித்து, ரயில்வே வாரிய தலைவரிடம் வழங்கவுள்ளோம். அதன்பின், ரயில்வே கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருநெல்வேலி- தாம்பரம் இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில்களை ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்க, பின்வரும் வாராந்திர சிறப்பு ரயில்கள் திருநெல்வேலி மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும்.

ரயில் எண். 06004/06003 திருநெல்வேலி – தாம்பரம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு கட்டண சிறப்புகள்:

ரயில் எண்.06004: ஆகஸ்ட் 07, 14, 21, 28 மற்றும் செப்டம்பர் 4 தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருநெல்வேலியில் இருந்து 19.00 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (5 சேவைகள்) தாம்பரத்தை 09.20 மணிக்கு சென்றடையும்.

ரயில் எண்.06003: தாம்பரத்தில் இருந்து ஆகஸ்ட் 8 15, 22, 29 மற்றும் செப்டம்பர் 5ம் தேதிகளில் (திங்கட்கிழமை) 22.20 மணிக்குப் புறப்பட்டு 10.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும், மறுநாள் (5 சேவைகள்) இதில் 1- ஏசி டூ டையர் கோச் 2- ஏசி த்ரீ டையர் கோச்கள். 7- ஸ்லீப்பர் வகுப்பு கோச், 3 பொது இரண்டாம் வகுப்பு கோச். 1. இரண்டாம் வகுப்பு (திவ்யாங்கியன் ஃப்ரண்லி) கம் லக்கேஜ்/பிரேக் வேன் மற்றும் 1- லக்கேஜ் கம் பிரேக் வேன் ஆகியவைகள் உள்ளன.

நேரம் மற்றும் நிறுத்தங்கள் விவரங்கள் பின்வருமாறு:

இந்த சிறப்புக் கட்டண ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை (ஜூலை 27) 8 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை முன்னிட்டு 28.7.22 மதுரை – ராமேஸ்வரம் – மதுரை சிறப்பு ரயிலும், பாலக்காடு நகரம் – ஈரோடு சந்திப்பு முன்பதிவு செய்யப்படாத ரயில் 29.7.22 அன்றும், ஈரோடு சந்திப்பு – பாலக்காடு டவுன் முன்பதிவு செய்யப்படாத ரயில் 30.7.22 அன்றும் மீண்டும் சேவையைத் தொடங்கப்படுகிறது.