Hosur Snowfall : ஓசூரில் கடுமையான பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் (Hosur Snowfall) ஓசூர் பகுதியில் காலை 9 மணியை கடந்தும் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு முன்பை விட மிக அதிகமாகவே காணப்பட்டது. தற்போதைய நிலையில் ஓசூர் பகுதியில் தொடர்ச்சியாக பனிப்பொழிவு காணப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மற்றும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர் நிலவுவது வழக்கம். அவ்வப்போது கடுமையான பனிப்பொழிவும் ஏற்படும். அந்த வகையில் ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பனிப்பொழிவு என்பது சற்று கூடுதலாகவே உள்ளது. இந்த பனிப்பொழிவு ஜனவரி மாதமான தற்போதும் தொடர்ந்து வரும் நிலையில் இன்று (ஜனவரி 18) காலை 9 மணியை கடந்தும் ஓசூர், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டது. சாலைகள் தெரியாதவாறு பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.