Nia Investigating Palani: பழனியில் தொடரும் என்.ஐ.ஏ. சோதனை

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த 3 நாட்களாக (Nia Investigating Palani) என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாமிட்டு சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 5 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பழனிக்கு சென்றனர். அங்கு பழனி பெரிய கடைவீதியில் டீக்கடை வைத்திருக்கும் முகமது கைசர் 50, என்பவரிடம் விசாரணை நடத்தினர். இவர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டல தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தி விட்டு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 17) 2-வது நாளாக முகமதுகைசரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை விசாரித்து விட்டு அவரை விடுவித்தனர். அதனை தொடர்ந்து முகமதுகைசரின் டீக்கடையில் சதாம் 30, என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவரை பழனி சண்முகநிதி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், பழனியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3-வது நாளாக இன்றும் (ஜனவரி 18) விசாரணை நடத்தி வருகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.