History Should Be Written:பொய் வரலாறுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி வரலாறுகள் எழுத வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: பொய் வரலாறுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி (History Should Be Written) வரலாறுகள் எழுதப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: அரசியலமைப்பு சட்டம் மீறப்படுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என்றார். மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்பட்டு வருவதை அனுமதிக்க முடியாது என்றார். வரலாற்று உணர்வுகளை ஊட்ட வேண்டும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

மேலும் கற்பனையாக சொல்லப்படும் வரலாற்றை நம்பி ஏமாந்துவிடக் கூடாது என்று கூறினார். அதிலும் பொய் வரலாறுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி வரலாற்றுகளை எழுத வேண்டும். அதே நேரத்தில் கீழடியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் திறக்கப்பட இருப்பதாகவும் அந்த உண்மையான வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே அரசுடைய கடமையாகும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.