Burhan Behardin Retirement:தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் பர்ஹான் பெஹர்டின் ஓய்வு

தென் ஆப்பிரிக்கா: கிரிக்கெட் வீரர் பர்ஹான் பெஹர்டின் (Burhan Behardin Retirement) எல்லா விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் பர்ஹான் பெஹர்டின் எல்லா விதமான போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தற்போது 39 வயதாகும் பர்ஹான் பெஹர்டின் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 59 ஒருநாள் போட்டியில் விளையாடி 1074 ரன்களை எடுத்துள்ளார்.

மேலும் 38 டி20 போட்டியில் விளையாடி 518 ரன்களை எடுத்துள்ளார். 2017ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா கேப்டனாக நியமினம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஓய்வு பற்றி பர்ஹான் பெஹர்டின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 18 ஆண்டுகளில் ஒருநாள் கூட நான் வேலை செய்யவே இல்லை. ஆனால் கிரிக்கெட்டை பொறுத்த மட்டில் ஆர்வத்துடன் விளையாடியிருக்கேன். அதிலும் 4 உலக கோப்பை போட்டியில் பங்கேற்றதை கடவுளின் ஆசியாக கருதுகிறேன். எனக்கு ஆதரவு வழங்கிய என்னுடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்த அனைத்து பயிற்சியாளர்கள் எனது சக வீரர்கள் அனைவருக்கும் நன்றியை கூறிகிறேன். இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.