Highest number of passengers: அதிக பயணிகளுடன் முதலிடத்தில் பெங்களூரு விமான நிலையம்

பெங்களூரு: Bangalore Airport is the number one airport with the highest number of passengers. கடந்த ஆண்டில் அதிக பயணிகள் போக்குவரத்தை கொண்ட விமான நிலையங்களின் பட்டியலில் பெங்களூரு கெம்பகவுடா விமானநிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. பெங்களூருவில் உள்ள கெம்பகவுடா விமான நிலையத்தில் இருந்து 2.75 கோடி பயணிகள் பயணித்துள்ளனர்.

கடந்த 2022ம் ஆண்டில் பெங்களூருவின் கெம்பகவுடா விமான நிலையத்தில் 2.43 கோடி உள்நாட்டு பயணிகளும் 31 லட்சம் வெளிநாட்டு பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஒரே நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து 7 ஆயிரம் பயணிகள் இந்த விமான நிலையத்திலிருந்து பயணம் செய்துள்ளனர். இங்கிருந்து பயணம் செய்தவர்கள் பெரும்பாலும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு அதிக முறை பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் துபாய், மாலே, சிங்கப்பூர், தோஹா மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளுக்கு பெங்களூரு விமான நிலையத்திலிருந்து அதிக பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதத்தில் பயணிகள் போக்குவரத்து அதிகமாக இருந்தது இந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது. விடுமுறை காலம் என்பதால் கிட்டத்தட்ட 31 லட்சம் பயணிகள் இந்த விமான நிலையத்திலிருந்து பயணம் செய்துள்ளனர். கொரோனா காலத்தை விட இந்த ஆண்டு பயணிகள் போக்குவரத்து 98 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா காலத்துக்குப் பிறகு அதிக இடங்களுக்கு விமான சேவையை பெங்களூரு விமான நிலையம் வழங்கி வருகிறது. இந்தியாவில் மட்டும் மொத்தம் 75 இடங்களுக்கு பெங்களூருவில் இருந்து விமான சேவை உள்ளது.