Turkey-Syria Earthquake: துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் 8 ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு

அங்காரா: Death toll surpasses 8000 in earthquake hit Turkey-Syria, expected to rise. துருக்கி மற்றும் சிரியாவில் திங்களன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

துருக்கியிலும், சிரியாவிலும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இடிபாடுகளைத் தோண்ட தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அங்காரா, துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 புள்ளிகள் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. இவ்விரு நாடுகளும் பேரழிவைச் சந்தித்துள்ளன. அங்கு பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.

இந்த நிலநடுக்க மையப்பகுதிக்கு தென்மேற்கில் அமைந்துள்ள ஹட்டாய் மாகாணத்தில் மட்டும் 1,500 கட்டிடங்கள் தரை மட்டமாகின. கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் நவீன எந்திரங்கள்உதவியுடன் தோண்டத் தோண்ட உடல்கள் கண்டெடுக்கப்படுவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளிலும் 2 ,300 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் நேற்று இரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை (6,200) தாண்டியிருந்தது.

இந்நிலையில் துருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கியின் 10 மாகாணங்களில் மட்டும் 5,894 பேர் மண்ணோடு புதைந்து மரணத்தை தழுவி உள்ளனர். 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.