CM Basavaraj bommai : முதல்வர் மாற்றம் என்ற பேச்சிற்கே இடமில்லை: முதல்வர் பசவராஜ் பொம்மை

பெங்களூரு : There is no change of Chief Minister in karnataka: Basavaraj bommai : முதல்வர் மாற்றம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மாநிலத்தில் முதல்வர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. முதல்வர் மாற்றம் என்ற பேச்சிற்கே இடமில்லை. அதற்கு எந்த அடிப்படையான காரணமும் இல்லை. இது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். இதனை யாரோ வேண்டும் என்றே அரசியல் லாபத்திற்காக (For political gain) பரப்பி வருகின்றனர் என்றார்.

கரோனா பாதிப்பிலிருந்து, சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்துள்ளேன். இது எனது உறுதியை மேலும் பலப்படுத்துகிறது. எனது யோசனைகள் அனைத்தும் மக்களுக்கும், அரசுக்கும் அதிகம் பணிகள் செய்ய வேண்டும் என்பதாக உள்ளது. மாநில வளர்ச்சிக்கு அதிக நேரம் பணியாற்ற முடிவு செய்துள்ளேன். இதன்படி இனி நாள் ஒன்றுக்கு கூடுதலாக 2 மணி நேரம் பணி செய்ய திட்டமிட்டுள்ளேன் (I plan to work for an additional 2 hours). வரும் நாட்களில் கட்சியை வலுப்படுத்துவதற்காக‌ மக்களிடம் செல்லும் முயற்சிகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் என்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மனதில் நிச்சயமற்ற நிலை உள்ளது. இதனால் அவர்கள் எதையோ யோசித்து, எதையோ செய்து வருகின்றனர். அவர்களின் மனதில் உள்ளத்தை, மாநில மக்களின் மனங்களுக்குள் நுழைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியினரை மக்கள் நம்பும் நிலைமையில் இல்லை (People are not in a position to trust the Congress party). காங்கிரஸ் எதையோ யோசித்தது. அவர்களின் மனதில் ஒரு பிரச்சனையை. மாநிலத்தின் மக்களின் மனங்களில் அதை பரப்ப விரும்புகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை யாரும் நம்பும் நிலையில் இல்லை. அதைவிட நான் மனசாட்சி உள்ளவன். எனக்கு மக்களின் மன நிலை என்ன என்ற உண்மை புரிந்து கொள்ளும் சக்தி உள்ளது என்றார்.

மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட பயிர்கள் மற்றும் உள்கட்டமைப்பு சேதம் குறித்த தற்போதைய கணக்கெடுப்பின் படி விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மேலும் மழை சேதம் குறித்து 2 அல்லது 3 நாட்களில் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மாநிலத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது The state continues to receive heavy rains). இதனால், உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. அவசர பணிகளுக்காக‌ மாநில அரசு ரூ. 500 கோடியை விடுவித்துள்ளது. மாநிலத்தில் மழையால் ஏற்பட்டுள்ள‌ பயிர் சேதம் தொடர்பாக‌ கணக்கெடுப்பு நடந்து வருகிறது என்றார்.

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள‌ ஈத்கா மைதானம் வருவாய் துறைக்கு (Revenue Department ) சொந்தமானது. அரசின் கொள்கைப்படி, அங்கு யார் வேண்டுமானாலும் கூட்டங்கள், விழாக்கள், திருவிழாக்கள் சட்டப்படி நடத்தலாம். இது குறித்து யார் என்ன சொன்னாலும், எங்களுக்கு சட்டம் முக்கியம். சட்டத்தின்படி நடப்போம். சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செய்ய மாட்டோம் என்றார் முதல்வர் பசவராஜ் பொம்மை.