Bangalore to Chennai : பெங்களூரில் இருந்து சென்னைக்கு வெறும் 2 மணி நேரத்தில் பயணம்

பெங்களூரு - சென்னை இடையே 2 மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையில் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே செல்லும். 258 கிமீ நீளமுள்ள பசுமை விரைவுச் சாலைக்கு (Green expressway highway) மத்திய அரசு சுமார் ரூ.1,800 கோடியை ஒதுக்கி உள்ளது.

புதுதில்லி: Travel from Bangalore to Chennai in just 2 hours : விரைவில் பெங்களூரும் சென்னையும் நெருங்கி வர உள்ளன‌. இரண்டு பெருநகரங்களுக்கிடையேயான பயண நேரம் 2 மணி நேரமாக குறைக்கப்படும். இதற்காக பசுமை விரைவு நெடுஞ்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 2022 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை-பெங்களூரு விரைவுச் சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

பெங்களூரு – சென்னை இடையே 2 மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையில் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே செல்லும். 258 கிமீ நீளமுள்ள பசுமை விரைவுச் சாலைக்கு (Green expressway highway) மத்திய அரசு சுமார் ரூ.1,800 கோடியை ஒதுக்கி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரின் புறநகரில் உள்ள ஹொசக் கோட்டையில் தொடங்கி, மாலூர், பங்காரப்பேட்டை, கோலார் தங்க வயல் (கேஜிஎஃப்), பலமனேர், சித்தூர், ராணிப்பேட்டை ஆகிய நகரங்கள் வழியாகச் செல்லும் இந்த விரைவுச் சாலை, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரம்பதூரில் முடிவடையும். இந்தச் சாலையில் வாகனங்கள் மணிக்கு 120 கி.மீ வேகம் வரை செல்லலாம். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) இந்த திட்டத்தை மூன்று கட்ட கட்டுமானங்களாகப் பிரித்துள்ளது.

அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த நெடுஞ்சாலைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 6 தனியார் நிறுவனங்கள் நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. பசுமை நெடுஞ்சாலை என்பது நான்கு வழிச்சாலை இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட சாலையாகும் (A four lane double decker elevated road). சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையிலான சராசரி பயண நேரம் ஐந்து முதல் ஆறு மணி நேரம் ஆகும், மேலும் இந்த புதிய விரைவுச் சாலை அதை இரண்டு முதல் மூன்று மணி நேரமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பசுமை நெடுஞ்சாலை மட்டுமின்றி சிலிக்கான் சிட்டி பெங்களூரு மற்றும் பேலஸ் சிட்டி மைசூரரு இடையே உள்ள தூரத்தை குறைக்கும் வகையில் நெடுஞ்சாலையும் அமைக்கப்படுகிறது. சுமார் 117 கிலோமீட்டர் நீளமுள்ள பெங்களூரு-மைசூரு (Bangalore-Mysore) நெடுஞ்சாலை அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு – சென்னை தேசிய விரைவுச் சாலைக்கான முன்மொழிவுகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் செய்துள்ளது. பெங்களூரு வழியாக மங்களூரு-சென்னைக்கு பசுமை விரைவுச் சாலையை நீட்டிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம் (National Highways Development Project) என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும். இந்தத் திட்டம் 1998 ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் அரசால் கொண்டுவரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் என்பது மொத்த சாலை தூரங்களில் 2 சதம் மட்டுமே. ஆனால் இந்தியாவின் மொத்த போக்குவரத்து 40 சதம் இந்த சாலைகள் மூலமாகவே நடைபெறுகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் இந்திய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவது, தரமுயர்த்துவது, அகலமாக்குவது போன்றவையாகும்.இத்திட்டம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை (NHAI) கொண்டு சாலை, நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.