Shilpa Shetty broke her leg : படப்பிடிப்பின் போது விபத்து: ஷில்பா ஷெட்டிக்கு கால் முறிவு

மும்பை : Accident during shooting, Shilpa Shetty broke her leg : யோகா, ஒர்க்அவுட் வீடியோக்கள் மூலம் எப்போதும் கவனத்தை ஈர்க்கும் ஷில்பா ஷெட்டி, இனி இடுப்பை வளைத்து நடனமாடி கவனத்தை ஈர்ப்பாரா என்ற சந்தேகம். காரணம் அழகு சிலையான ஷில்பா ஷெட்டிக்கு படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டுள்ளது. காலில் காயம் அடைந்து கட்டுப்போட்டுள்ள ஷில்பா ஷெட்டி சக்கர நாற்காலியில் உட்கார்ந்தப்படி, இது குறித்து சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்துள்ளார்.

சில காலம் பாலிவுட்டில் இருந்து விலகியிருந்த ஷில்பா ஷெட்டி தற்போது பாலிவுட்டில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். 40 வயதிற்குப் பிறகும், தனது சொந்த யூடியூப் சேனல், யோகா சிடி, டிவி ஷோ, ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் பிஸியாக இருந்த ஷில்பா ஷெட்டிக்கு இன்னும் பாலிவுட்டில் வாய்ப்புகள் குறையவில்லை. இதனால் தற்போதும் பல்வேறு திரைப்படங்கள், சீரியல்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போதும் ஷில்பா ஷெட்டி படப்பிடிப்பில் பிஸியாக இருந்து (Shilpa Shetty has been busy shooting) வருகிறார். அப்போது திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்த ஷில்பா ஷெட்டிக்கு அடிபட்டு, கால் முறிந்துள்ளது.

இந்திய போலீஸ் போர்ஸ் என்ற‌ படப்பிடிப்பின் போது ஷில்பா ஷெட்டி காயம் அடைந்துள்ளார். ரோஹித் ஷெட்டி இயக்கிய இந்த வெப் சீரிய‌ல் ஓடிடியில் (OTT) ஒளிபரப்பாகும், இந்தத் தொடரின் படப்பிடிப்பின் போது ஷில்பாவுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஷில்பா ஷெட்டி இதைப் பற்றி சமூக வலைதளங்களில் ஒரு வேடிக்கையான பதிவைச் செய்துள்ளார். படபிடிப்பின் போது இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோர் கேமராவை ரோல் என்றனர். அப்போது”ஒரு காலை உடை என்றனர்” அதனை நான் உண்மை என்று நான் எடுத்துக் கொண்டேன் என நினைக்கிறேன். ஆறு வாரங்கள் ஓய்வு (six weeks Rest)எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். என்றாலும் நான் விரைவில் திரும்பி வருவேன் என்று அவர் தனது உடைந்த காலில் கட்டு போட்டுள்ள‌ புகைப்படத்துடன் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஷில்பா ஷெட்டி விரைவில் குணமடைய பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் (Bollywood celebrities have wishing her). சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா ஷெட்டி, கேஜிஎஃப்-2 வெளியானபோது கேஜிஎஃப்-2 படத்தின் டயலாக்கை கேலி செய்தார். மேலும், நடனங்கள் மற்றும் ரீல்கள் மூலம் தனது ரசிகர்களுக்கு ஆச்சரியங்களை, மகிழ்ச்சியை அளித்து வந்தார்.

இந்தி படங்களில் மட்டுமின்றி தமிழ், கன்னடம்உள்ளிட்ட மொழிகளில் ஷில்பா ஷெட்டி நடித்து வந்தாலும், கர்நாடகத்தின் துளு மொழியை தாய்மொழியாக கொண்டவர். நடிகை மற்றும் மாடல் ஆவார். பாஜிகர் திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து பாலிவுட், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள் அனைத்தையும் சேர்த்து அவர் 40 திரைப்படங்களில் (She has acted in 40 movies) நடித்துள்ளார். 1994 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆக் திரைப்படத்தில் முக்கியப் பாத்திரத்தில் அவர் நடித்தார். ஷில்பா தனது நடிப்புத் தொழிலில் இருந்து பலமுறை புறக்கணிக்கப்பட்டாலும் தன் திறமையை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார். பிர் மிலேங்கே திரைப்படத்தில் அவர் எயிட்ஸ் நோயாளியாக நடித்ததற்காக பல விருதுகளைப் பெற்றார்.அவர் நடித்த லைஃப் இன் எ மெட்ரோ மற்றும் அப்னே ஆகிய இரு திரைப்படங்களும் வெற்றி பெற்றன. லைஃப் இன் எ மெட்ரோவில் அவரது நடிப்பு சிறப்பாக பாராட்டப்பட்டது.