New Supreme Court chief judge : உச்சநீதிமன்றத்தின் 49-வது நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்

தில்லி : U.U. Lalit appointed as the 49th chief judge of the Supreme Court : உச்சநீதிமன்றத்தின் 49-வது நீதிபதியாக யு.யு.லலித்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா (Chief Justice NV Ramana) உள்ளார். அவரது பதவிக்காலம் ஆக. 26 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். அதனைத் தொடர்ந்து யு.யு.லலித் ஆக. 27-ஆம் தேதி தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். இதற்கான பரிந்துரையை தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா செய்திருந்தார். உச்சநீதிமன்றத்தின் பதவி, வயது மூப்பு காரணமாக வழங்கப்பட்டு வருகிறது. பதவியில் உள்ள தலைமை நீதிபதி, தான் ஓய்வு பெறுவதற்கு முன்பு அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி என்.வி.ரமணா, யு.யு.லலித் பெயரை பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரை ஏற்கபட்டு, நியமன உத்தரவில் குடியரசு தலைவர் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் 49 வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் (Union Ministry of Law) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 124 துணைப் பிரிவு 2 அளித்துள்ள அதிகாரத்தின்படி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார். இதனையடுத்து ஆக. 27-ஆம் தேதி முதல் இந்த நியமனம் நடைமுறைக்கு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வரும் யு.யு.லலித்தின் பதவி காலம் இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளது. அவர் வரும் நவ. 8 ஆம் தேதி அப்பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமிக்கப்பட்டதன் மூலம், வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் (From lawyer to Supreme Court judge directly), அதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்படும் 2 வது நபர் ஆவார். பிரபல வழக்கறிஞராக பணியாற்றி வந்த யு.யு.லலித், கடந்த 2014-ஆம் ஆண்டு ஆக. 13 ஆம் தேதி நேரடியாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இவருக்கு முன்பாக நீதிபதி எஸ்.எம்.சிக்ரி (Justice SM Sikri) வழக்கறிஞ்சராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும், பின்னர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்றார். புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள யு.யு.லலித்திற்கு தற்போதை குடியரசு தலைவர் என்.வி.ரமணா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நீதிபதி யு.யு.லலித்தின் தந்தை யு. ஆர். லலித் (U.U.Lalit’s father U.R. Lalit)மும்பை உயர் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாகவும், பின்னர் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தவர். யு.யு.லலித் ஜூன் 1983 ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு பணியாற்றினார். யு.யு. லலித் 1986 முதல் 1992 முடிய இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞ்சராக‌ சோலி சொராப்ஜியுடன் பணிபுரிந்தார். 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதிய‌ன்று யு.யு.லலித் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்ற‌ தகுதியைப் பெற்றார். 2011-ஆம் ஆண்டில் யு.யு. லலித் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு வழக்கில் சி பி ஐயின் சிறப்பு வழக்கறிஞராக இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். 13 ஆகஸ்டு 2014 அன்று உதய் உமேஷ் லலித் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அயோத்தி சிக்கலுக்கு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் யு.யு. லலித் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.