Rs. 9.19 crore worth of drugs seized: ரூ. 9.19 கோடி மதிப்பில் போதைப் பொருள்கள் பறிமுதல்: அமைச்சர் மா.சுப்ரமணியம் தகவல்

சென்னை: Rs. 9.19 crore worth of drugs seized: Minister Ma. Subramaniam :கடந்த ஜூன் மாதம் வரை ரூ. 9.19 கோடி மதிப்பிலான 152 டன் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் புதன்கிழமை போதைப் தடுப்பு பொருள்கள் மாநாடு (Convention on Narcotic Drugs) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியது: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போதைப் பொருள்கள் பயன்பாடு அதிக அளவில் இருந்தது. கடந்த ஆட்சியில் போதைப் பொருள்களை பயன்படுத்த தடை விதித்திருந்தாலும், சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் போதைப் பொருள்கள் எளிதாக கிடைத்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு போதைப்பொருள்கள் தமிழகத்தில் உற்பத்தியோ, தயாரோ செய்யவில்லை என்றாலும், ஆந்திரா, தெலுங்கா, ஒடிசா, வடகிழக்கு மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

2013 ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை சுமார் ரூ. 38.99 கோடி மதிப்புள்ள 952 டன் எடையுள்ள குட்கா, பான்மசாலா (Gutka, Panmasala weighing 952 tonnes ) கைப்பற்றப்பட்டன. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் 2022 ஆண்டு ஜூன் மாதம் வரை ரூ.9.19 கோடி மதிப்புள்ள 152. 96 டன் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் குட்கா, பான்மசாலா உள்ளிட்டவைகளை விற்பனை செய்பவகள் மீது காம்பவுண்ட் அபன்ஸ் என்ற தலைப்பின் கீழ் 2013 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ரூ. 2.88 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ. 2 கோடி அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டுள்ளது.

2013 முதல் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 1308 மாதிர்கள் எடுக்கப்பட்டு, அதில் 1093 மாதிரிகள் தரமற்றதாகவும், 136 மாதிரிகள் தரக்குறைவாக மற்றும் தவறான முத்திரைகள் குத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக 686 குற்றவியல் வழக்குகளும், 107 உரிமையியல் வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதிமன்றங்கள் மூலம் ரூ. 58.22 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வியாழக்கிழமை (ஆக. 11) தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இருந்து ஏறக்குறைய 30 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி (30 lakh students will participate in the awareness programme) நடைபெற உள்ளது என்றார் அவர்.

இந்த நிலையில் தமிழகத்தில் போதைப் பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அனைவரையும் கைது செய்து, அவர்களது மொத்த சொத்துகளை முடக்கப் படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போதைப்பொருள்களுக்கு அடிமையாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இது தொடர்பாக போதிய கவனம் செலுத்தாமல் விட்டதன் காரணமாக இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் (District Collectors, Superintendents of Police) கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த பிரச்னை வரும் காலங்களில் பெரும் பிரச்னையாக மாறிவிடக்கூடாது. போதைப் பொருள்கள் மாநிலத்தில் நுழைவதை தடுக்க வேண்டும். போதை பழக்கத்திற்கு இளைஞர்கள் ஆளாகிவிடாமல் முனைப்புடன் இளைஞர் சமுதாயத்தை பாதுகாத்திடம் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.