Free travel on the BMTC : பெங்களூரு மக்களுக்கு நற்செய்தி: மாநகர போக்குவரத்து கழகத்தில் இலவச பயணம்

Free travel: வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில், அந்நிறுவனத்தின் வழக்கமான போக்குவரத்தில் பயணிக்கும் பயணிகள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

பெங்களூரு: Good news for the people of Bangalore: free travel on the BMTC மாநகர போக்குவரத்து கழகத்தில் (பிஎம்டிசி) இலவசப் பயணம்: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே நாட்டில் பல பிரச்சாரங்களை நடத்தி வருகின்றன. நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி (ஆசாதி கா அமிர்த மஹோத்சவத்தில்) நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்க வேண்டும் என்பதால், ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்ற மத்திய அரசு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் தங்கள் சுயவிவரப் புகைப்படங்களை மூவர்ணக் கொடியின் புகைப்படத்துடன் மாற்றுமாறு நாட்டு குடிமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இவை அனைத்திற்கும் மத்தியில், தற்போது பெங்களூருவில் போக்குவரத்துப் பேருந்து சேவைகளை வழங்கி வரும் BMTC, நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி (On the occasion of 75th Independence Day) பெங்களூரு மாநகர மக்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்க உள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி, மாநகர போக்குவரத்து சேவை தொடங்கப்பட்ட 25 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நிறுவனத்தின் வழக்கமான போக்குவரத்தில் பயணம் செய்யும் பயணிகள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

வெள்ளி விழாவையொட்டி (On the occasion of the Silver Jubilee) பயணிகளுக்கு ஒரு நாள் இலவச பயணத்தை அனுமதிக்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குநர் மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மாநில அரசு பிஎம்டிசியின் இந்த கோரிக்கையை ஏற்று, சுதந்திர தினத்தன்று, மாநில தலைநகர் பெங்களூரில் பொது மக்கள் இலவசமாக மாநகர போக்குவரத்து கழகம் பயணம் செய்யலாம்.

கர்நாடக போக்குவரத்து கழகத்தின் ஒரு பிரிவாக பெங்களூரு போக்குவரத்து சேவை (BTS) உருவாக்கப்பட்டது. இதனையடுத்து பெங்களூரு மாநகர மக்களின் பயணத் தேவைகளுக்காக போக்குவரத்து கழகம், போக்குவரத்து கழகம் (BMTC) 1997 ஆம் ஆண்டு ஆக. 15-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. பெங்களூரில் ஆக. 15-ஆம் தேதி மாநகர போக்குவரத்து கழகத்தின் வெள்ளி விழா நடை பெற உள்ளது. ஆக. 16-ஆம் தேதி, கத்திரிகுப்பேவில் உள்ள சமுதாய பவனில், விபத்து இல்லாமல் பேருந்துகளை இயக்கிய ஓட்டுநர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் (Gold and Silver Medals), பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர். இதில் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் உள்பட பலர் கலந்து கொண்டு, விழாவினை சிறப்பிக்க உள்ளனர்.

மேலும் 75 சுதந்திர தினத்தையொட்டி ஆக. 14-ஆம் தேதி விதான சவுதா கிழக்கில்12 மீட்டர் நீளமுள்ள 300 பேருந்துகளின் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆக. 16 ஆம் தேதி போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட சுமார் 10,700 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பெங்களூரு ஜெயதேவா மருத்துவமனையில் இலவசமாக‌ இதயம் தொடர்பான உடல்நலப் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது (Free cardiac health check-ups are available) என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.