3 arrested : பிரவீன் நெட்டாறு கொலை வழக்கில் 3 பேர் கைது

பிரவீன் நெட்டாறுவை கொலை செய்ய ஒரு வாரத்திற்கு முன்பே இவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால் கோழிக்கடையை மூடிவிட்டு, பிரவீன் நெட்டாறு தனது மனைவியுடன் தினம் வந்ததால், அவரை கொலை செய்ய முடியாமல் போயியுள்ளது.

மங்களூரு : 3 arrested in Praveen Nettaru murder case : பாஜக இளைஞரணி பிரமுகர் பிரவீன் நெட்டாறு கொலை வழக்கில் கேரளாவைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளர்வர்கள் ஷியாப், ரியாஜ், பஷீர் என தெரியவந்துள்ளது. அண்மையில் பிரவீண் நெட்டாறு தனது கோழிக்கடையை மூடிவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், அவரை அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இது மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை கைது செய்ததாக ஏடிஜிபி ஆலோக்குமார் (ADGP Alok Kumar) தெரிவித்தார். மேலும் அவர் கூறியது: பிரவீன் நெட்டாறு கொலை வழக்கில் தொடர்புடை ஷியாப், ரியாஜ், பஷீர் ஆகியோர் கேரளத்தில் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீஸார் கேரள மாநிலம் எல்லையில் உள்ள தளப்பாடியில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஷியாபுதீன் என்கிற ஷியாப் தென்கன்னட மாவட்ட சுள்யாவைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. பிரவீன் நெட்டாறுவை கொலை செய்ய ஒரு வாரத்திற்கு முன்பே இவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால் கோழிக்கடையை மூடிவிட்டு, பிரவீன் நெட்டாறு தனது மனைவியுடன் தினம் வந்ததால், அவரை கொலை செய்ய முடியாமல் போயியுள்ளது.

ஜூலை 26-ஆம் தேதி (On 26th July) இரவு பிரவீன் நெட்டாறு தனியாக வந்ததையடுத்து அவரை, திட்டமிட்டபடி கொலையாளிகள் கொலை செய்துள்ளனர். இதற்கு முன்பு தென்கன்னட மாவட்டம் பல்லாரேவில் மசூத் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு பழிக்கு பழி வாங்க இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்துள்ளனர். கடந்த ஜூலை 19-ஆம் தேதி மசூத் என்பவர் ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் ஜூலை 21-ஆம் தேதி பாஜக பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அன்று கொலையாளிகள் பிரவீன் நெட்டாறுவை கொலை செய்ய முடிவு செய்து, அவருக்கு சொந்தமான கோழிக்கடை அருகே வந்தப்போது, பிரவீன் நெட்டாறுவுடன் அவரது மனைவியும் இருந்துள்ளார். இதனையடுத்து அன்று பிரவீன் நெட்டாறுவை கொலை செய்யும் திட்டத்தை கைவிட்டுள்ளனர். ஜூலை 26-ஆம் தேதி கோழிக்கடையில் தனியாக இருப்பதை அறிந்து, பதிவு எண்ணில் இல்லாத மோட்டார் சைக்கிளில் (On a motorcycle with no registration number) வந்த கொலையாளிகள், பிரவீன் நெட்டாறுவைக் கொலை செய்து விட்டு, பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு, காரில் கேரளாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.

கொலைக்கு பிறகு கேரளாவில் எங்கு தங்க வேண்டும் என்பதனை கொலையாளிகள் ஏற்கெனவே முடிவு செய்துள்ளனர். அதன்படி கேரள மாநில கண்ணூர் மாவட்டம் மலப்புரத்தில் உள்ள படகு துறையில் தங்கி உள்ளனர். பின்னர் 15 நாள்களில் 7 இடங்களுக்கு மாறிச் சென்றுள்ளனர் (They have shifted to 7 places in 15 days). கொலையாளிகள் தங்கி உள்ள இடம் தொடர்பான தகவலை பெற்ற போலீஸார் அங்கு சென்றன‌ர். அதற்குள் கொலையாளிகள் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளனர். ஆனால் போலீஸார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

முன்னதாக கொலையாளிகள் குறித்த தகவலை பெற்ற போலீஸார், அவர்களது குடும்பத்தினரிடம் விசாரணை செய்தனர். அப்போது கொலையாளிகளின் குடும்பத்தின் சொத்துகளை முடக்குவதாக போலீஸார் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதுமட்டுமின்று கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த தகவல் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை எட்டியுள்ளது. இந்த நிலையில் கொலையில் தொடர்புள்ளவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். பிரவீன் நெட்டாறு கொலை வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (National Intelligence Agency) ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.