Jagdeep Dhankar : இந்திய துணைக் குடியரசு தலைவராக ஜகதீப் தன்கர் பதவி ஏற்பு

தில்லி: Jagdeep Dhankar assumes office as Vice President of India : நாட்டின் 14-வது துணை குடியரசு தலைவராக‌ ஜகதீப் தன்கர் வியாழக்கிழமை பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி (Prime Minister Narendra Modi), முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை குடியரசு தலைவர்கள் வெங்கையா நாயுடு, ஹமீது அன்சாரி, மக்களவைத் துணைத் தலைவர் ஓம் பிர்லா உள்பட மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோ ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்திய துணைக் குடியரசு தலைவர் பதவி வகித்த‌ வெங்கையா நாயுடுவின் (Venkaiah Naidu) பதவி காலம் ஆக. 10 ஆம் தேதி நிறைவு பெற்ற‌து. இதனையொட்டி நடைபெற்ற தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த மேற்கு வங்கத்தின் ஆளுநராக பதவி வகிக்கும் 70 வயது ஜகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்தவரும், ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான 80 வயது மார்கரேட் ஆல்வாவும் போட்டி இட்டனர்.

இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட மக்களவை, மாநிலங்களவை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்தனர், மக்களவை, மாநிலங்களவையில் உள்ள 725 உறுப்பினர்கள் உள்ளனர். இன்று ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்ற தேர்தலில் 725 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் 528 வாக்குகள் ஜகதீப் தன்கருக்கும், 182 வாக்குகள் மார்கரேட் ஆல்வாவிற்கும் கிடைத்தது. 15 வாக்குகள் செல்லாதவையாகி விட்டன.

துணைக் குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜகதீப் தன்கர் (Jagdeep Thankar) ராஜாஸ்தானைச் சேர்ந்தவர். அம்மாநிலத்தில் செல்வாக்கு மிக்க ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். பாஜகவைச் சேர்ந்த இவருக்கு அதிமுக, ஐக்கிய ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக இவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.. எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் மார்கரேட் ஆல்வாவிற்கு (Margaret Alva) திமுக, தேசிய வாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தெலுங்கானா ராஷ்டிர சமீதி உள்பட 17 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இருப்பினும் அவர் 182 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

ஆக. 10 ஆம் தேதி துணைக் குடியரசு தலைவராக இருந்த‌ வெங்கையா நாயுடுவின் பதவி காலம் நிறைவு பெற்றதையடுத்து, வியாழக்கிழமை துணை குடியரசு தலைவராக ஜகதீப் தன்கர் பதவி ஏற்றார். அண்மையில் நடந்த குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டி திரௌபதி முர்மு (Draupadi Murmu) அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் எதிர்த்து போட்டியில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா தோல்வி அடைந்தார். இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஜகதீப் தன்கர் வெற்றி அடைந்ததையடுத்து, அவர் இன்று துணைக் குடியரசு தலைவராக பதவி ஏற்றார். இவர் நாட்டின் 14-வது துணை குடியரசு தலைவராவார்.