Gold seized at Chennai airport: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.42 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை: Customs officials seized gold worth Rs 1.42 crore and foreign currency worth Rs 8.1 lakh at the Chennai airport. சென்னை விமான நிலையத்தில் ரூ.1.42 கோடி மதிப்பிலான தங்கம், ரூ.8.1 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி தெரிவிக்கையில், சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த உளவு தகவலின் அடிப்படையில் நேற்று (15.02.2023) எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாயிலிருந்து வந்த ஆண் பயணி ஒருவரை சோதனை செய்ததில் பசை வடிவிலான நான்கு தங்கப் பொட்டலங்களை அவர் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இவை 1585 கிராம் எடையிலான ரூ.81.31 லட்சம் மதிப்புடையதாகும். அந்த நபர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மற்றொரு சம்பவத்தில் நேற்று ஏர் ஏஷியா விமானம் மூலம் கோலாலம்பூரிலிருந்து வந்த மலேஷியாவைச் சேர்ந்த பெண் பயணி ஒருவரை சோதனை செய்ததில் அவர், பசை வடிவிலான மூன்று தங்கப் பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1178 கிராம் எடையிலான இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.60.43 லட்சம் ஆகும். அப்பயணி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மற்றொரு சம்பவத்தில் நேற்று ஏர் ஏஷியா விமானம் மூலம் பாங்காங்க் செல்லவிருந்த ஆண் பயணி ஒருவரை சோதனை செய்ததில் இந்திய மதிப்பில் ரூ.8.10 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் வைத்திருந்தது தெரியவந்தது.

கடந்த 14ம் தேதி ரூ.98.03 இலட்சம் மதிப்புள்ள 1911 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உளவுத் தகவல் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கடந்த செவ்வாய்கிழமை (14.02.2023) துபாயிலிருந்து வந்த விமானப்பயணி ஒருவரை இடைமறித்து விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து 23 தங்கக்கட்டிகள், 6 தங்க மோதிரங்கள் உட்பட ரூ.98.03 இலட்சம் மதிப்புள்ள 1911 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த விமானப்பயணி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.