Erode by Election: ஈரோட்டில் தேர்தல் விதி மீறியதாக 110 புகார்கள்

ஈரோடு: 110 complaints of violation of election rules in Erode. தேர்தல் விதிமுறைகள் மீறியதாக இதுவரை 110 புகார்கள் வந்துள்ளதாக ஈரோடு தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உயிரிழந்ததையடுத்து, இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், களத்தில் 77 வேட்பாளர்கள் உள்ளனர். இதனிடையே அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார்ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்கள் யாரும் சிறை வைக்கப்படவில்லை. இதுகுறித்து வாக்காளர்களிடம் விசாரணை நடத்தினோம்.

இந்திய தேர்தல் ஆணையத்திலிருந்து எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. நேற்று கூட தேர்தல் நடத்தும் ஏற்பாடுகள் குறித்து தான் வீடியோ கான்பிரஸ் மீட்டிங் நடந்தது. விதிமுறைகள் மீறியது குறித்து எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.48.6 லட்சம் வரை பணம் பிடிக்கப்பட்டது. இவ்வாறு சிவகுமார் தெரிவித்தார்.