Gold Rate Today Hike: தங்கத்தின் விலை திடீர் உயர்வு

சென்னை: சர்வதேச சந்தையில் (Gold Rate Today Hike) ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்றம், இறக்கமாக உள்ளது.

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 31 ரூபாய் உயர்ந்து ரூ.5,221க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி சவரனுக்கு ரூ.248 அதிகரித்து ரூ.41,768 விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெள்ளி கிராம் ரூ.90 பைசா உயர்ந்து ரூ.74.40 விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.74,400 விற்பனை செய்யப்படுகிறது.