Normal Train As Vande Bharat: சாதாரண ரயிலுக்கு வர்ணம் பூசி வந்தே பாரத் ரயிலாக மாற்றிவிட்டனர்: மேற்கு வங்க அமைச்சர் பரபரப்பு தகவல்

கொல்கத்தா: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்கின்ற பெயரில் (Normal Train As Vande Bharat) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன அதிவேகமாக செல்லும் வகையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி இந்த ரயிலின் முதல் சேவை டெல்லி வாரணாசி வழித்தடத்திலும், இரண்டாவது ரயில்சேவை டெல்லி, காஷ்மீர் வைஷ்ணவி கோயில் வழித்தடத்திலும், மூன்றாவது மும்பை காந்தி நகர் வழித்தடத்திலும், நான்காவது இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா மற்றும் டெல்லி வழித்தடத்திலும் தேவை தொடங்கப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. கடந்த வாரத்தில் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா நியூ ஜல்பை குரி இடையில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சாதாரண ரயிலுக்கு வர்ணம் பூசி வந்தே பாரத் என்கின்ற பெயர் வைத்து மக்களுடைய பணத்தை பயன்படுத்த வேண்டாம் என மேற்கு வங்காள அமைச்சர் உதயன் குஹா தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசும்போது சாதாரண ரயிலுக்கு வந்தே பாரத் என்ற பெயரை மாற்றி அதிவேக ரயில் என்ற கட்டணத்தை வசூல் செய்கின்றனர். இது போன்று வர்ணம் பூசி மக்களின் பபணத்தை பயன்படுத்த வேண்டாம் என்றார்.