Heart Attack Explained By Actor Vimal:மாரடைப்பு வந்ததா? நடிகர் விமல் அளித்த விளக்கம்

சென்னை: நடிகர் விமலுக்கு திடீரென்று மாரடைப்பு (Heart Attack Explained By Actor Vimal) ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவியது. இதனால் தமிழ் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகர் விமல் தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முதல் முதலில் களவாணி திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் விமல். அதன் பின்னர் வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தை பிடித்தார். அதிலும் கிராம கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போன்று தனது உடல் தோற்றத்தையும் கொண்டவர் விமல்.

மேலும் நடிகர் விமலுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது. இதனால் சினிமா வட்டாரங்களை சேர்ந்த பலரும் விமலை தொடர்பு கொண்டு விசாரிக்க தொடங்கினர்.

இந்நிலையில், தன்னுடைய உடல்நிலை பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகர் விமல் விளக்கம் அளித்திருக்கிறார். அந்த வீடியோ பதிவில் பேசும்போது, எனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. யாரோ சிலர் தவறான தகவலை வெளியிட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் எனக்கு லேசான இருமல் இருந்தது. அதன் காரணமாக மருத்துவமனை சென்றிருந்தேன். இப்போது நலமாக இருக்கிறேன் என நடிகர் விமல் வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.