Sexual Harassment of Students: வாட்ஸ் ஆப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியருக்கு தர்ம அடி

திருவண்ணாமலை: A teacher who sexually harassed female students in a WhatsApp group was slapped near Vandavasi. வந்தவாசி அருகே வாட்ஸ் ஆப் குரூப்பில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சாலவேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவி- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் பரணி என்பவர் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், அறிவியல் பாடம், செய்முறை தேர்வு குறித்து பயிற்சி அளிக்க, ‘வாட்ஸ் ஆப்’ குழு அமைத்துள்ளார். இதில், 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர் உள்ளனர்.

இந்த வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள மாணவிகள் சில பேருக்கு ஆசிரியர் பரணி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இரவு நேரங்களில் வீடியோ காலில் வரும்படி அச்சுறுத்தியுள்ளார். இது குறித்து, மாணவியர், அவரது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை சாலவேடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வந்தனர். பள்ளி வகுப்பறையில் இருந்த ஆசிரியர் பரணியை அவர்கள் திடீரென தாக்கினர். அங்கிருந்தவர்கள் ஆசிரியரை மீட்டனர்.

மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு பள்ளி முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்கு சென்ற கீழ்கொடுங்காலுார் போலீசார் பெற்றோரிடம் பேச்சு நடத்தி, ஆசிரியர் பரணியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.