Palani Murugan Temple Revenue: 20 நாட்களில் பழனி கோயிலில் உண்டியல் எவ்வளவு தெரியுமா?

பழனி: பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கையாக (Palani Murugan Temple Revenue) 3 கோடியே 80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அது போன்று கோயிலுக்கு வருபவர்கள் தங்களால் முடிந்த அளவில் காணிக்கை செலுத்துகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதனையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதன்படி இரண்டு நாட்கள் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில் 3 கோடியே 80 லட்சத்து 45 ஆயிரத்து 807 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது.

அது மட்டுமின்றி தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட தாலி, கொலுசு, வேல், மோதிரம் உள்ளிட்டவைகளும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். தங்கம் 855 கிராமும், வெள்ளி 10,631 கிராமும், வெளிநாட்டு கரன்சி 574 நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்த காணிக்கைகளும் அனைத்தும் 20 நாட்களில் கிடைத்த வருவாயாகும். உண்டியல் எண்ணுவதை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வங்கி உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.