Cyclonic Storm: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வங்கக்கடலில் புயல்..

சென்னை: Depression by tomorrow and expected to further intensify into a Cyclonic Storm. அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வங்கக்கடலின் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வரும் 8ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளது.

இதனையடுத்து கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் நாகை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற படகுகளும் தகவல் தெரிவித்து கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கயைில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஒரு சூறாவளி புயலாக மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.