Free cycle for 6.35 lakh students: 6.35 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்: முதல்வர் தொடங்கி வைப்பு

சென்னை: Free cycle for 6.35 lakh students: சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்குவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் மேல்நிலைப் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்குக்கும், (Govt Students) தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் தமிழ்நாடு (Tamilnadu Government) அரசால் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (Tamilnadu Chief Minister M.K.Stalin), இன்று (25.07.2022) சென்னை , நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் (Free Cycles) வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.