Dr.Ramadoss Birthday: பாமக நிறுவனர் ராமதாஸின் பிறந்த நாளை கொண்டாடிய கொள்ளு பேத்தி, பேரன்

சென்னை: The 84th birthday of PMK founder Dr. Ramadoss: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 84வது பிறந்தநாளை அவரது கொள்ளு பேரன், பேத்தி மரக்கன்று நட்டு கொண்டாடினர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல்வாதியுமான டாக்டர் ராமதாஸ் இன்று தனது 84வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியினர் (Pattali Makkal Katchi) கொடியேற்றியும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (Tn Cm M.K.Stalin) தனது வாழ்த்து செய்தியில், சமூகநீதிக் களத்தில் மேலும் பல்லாண்டுகள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy), பெரியவர் மருத்துவர் அய்யா.ராமதாஸ் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் மாநில பாஜக தலைவர் அண்ணமலை (Tn Bjp President Annamalai), அவர் நீண்ட ஆயுளுடன் மக்கள் சேவையைத் தொடர கட்சி சார்பாக வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில், கொள்ளு பேரன் மிளிர் மற்றும் பேத்தி அகிரா இருவரும் மரக்கன்று நட்டனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) மற்றும் அவரது மனைவி உடனிருந்தனர்.