Fire accident : இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் தீ விபத்து : ரூ 10 லட்சம் மதிப்பில் பொருள்கள் சேதம்

கிருஷ்ணகிரி : Damage goods worth Rs 10 lakhs : கிருஷ்ணகிரி மேற்கு இணைப்பு சாலையில் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளன.

தமிழகம் கிருஷ்ணகிரியில் மேற்கு இணைப்பு சாலையில் மேற்கு இணைப்பு சாலையில் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை உள்ளது. இதன் உரிமையாளர் பாஸ்கர். இந்தக் கடையை வியாழக்கிழமை இரவு (Thursday night) பணி முடிந்து பூட்டிச் சென்றிருந்தனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு அந்தக் கடையில் தொடர்ந்து அதிக அளவில் புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு (fire station) தகவல் தெரிவித்தனர்.

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வாகனத்துடன் விரைந்து வந்த‌ தீயணைப்பு படையினர், கடை முழுவதும் பரவி (spread throughout the store) மளமளவென‌ என எரிந்த‌ தீயை 2 மணி நேரத்திற்கு மேலாக‌ போராடி, அணைத்தனர். தீ அருகிலுள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.

இந்த தீ விபத்தில் இருசக்கர வாகனங்கள், உதிரி பாகங்கள், எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் (Value Rs.10 Lakhs) இருக்கும் எனக் கூறப்படுகிறது. தீ விபத்திற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இது குறித்து கிருஷ்ணகிரி நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.