Factory fire in Hubballi : ஹூப்ளியில் தொழிற்சாலை தீ விபத்து : 5 தொழிலாளர்கள் சிக்கியிருக்க வாய்ப்பு

ஹுப்பள்ளி: 5 workers are suspected to be stuck : ஹூப்ளியில் தொழிற்சாலை தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது

ஹுப்பள்ளி ஊரகம் தரிஹால தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் ( factory in an industrial estate) ஒன்றில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது, இதில் தொழில்சாலையில் பணியாற்றி வந்த 5 தொழிலாளர்கள் தீ விபத்தில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த‌ போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் (Fire fighters) தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்தில் காயமடைந்த 20 வயது பிரேமா, 30 வயது சோனியா, 29 வயது நிர்மலா, 45 வயது கௌரம்மா, 34 வயது விஜயலட்சுமி, 18 வயது நிர்மலா ஆகிய 6 பெண்கள், 42 வயது சென்னப்பா, 27 வயது மாலெப்பா ஆகிய 2 ஆண்கள் உள்பட 8 பேர் சிகிச்சைக்காக கிம்ஸ் மருத்துவமனையில் (Admitted to Kims Hospital)அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஹுப்பள்ளி ஊரக போலீசார் (Hubballi Rural Police) வழக்கு பதிந்து தீ விபத்திற்கான காரணத்தை விசாரணை செய்து வருகின்றனர். தொழில்சாலைகளுக்குள் 5 பேர் சிக்கி இருக்கலாம் என சந்தேகப்படுத்துவதால் தீயணைப்பு படையினர் தொடர்ந்து போராடி அவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.