2000 tricolor National Flags : ஆசாதி அம்ரித் மஹோத்சவ் விழாவில் ஹர் கர் திரங்கா இயக்கத்தின் ஒரு பகுதியாக 2 ஆயிரம் தேசியக் கொடிகள் இலவச விநியோகம்

பெங்களூரு : Chickpet Constituency Hombegoudanagar : ஆசாதி அமிர்த மஹோத்சவ் விழாவையொட்டி, ஹோம்பேகவுடாநகர் வார்டு பாஜக‌ சார்பில், ஹர்கர் திரங்கா இயக்கத்தின் ஒரு பகுதியாக, 2,000 மூவர்ணக் கொடிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வன வளர்ச்சிக் கழக இயக்குந‌ர், பாஜக பெங்களூரு தெற்கு மாவட்ட துணைத் தலைவர் (Vice President Bangalore South District) பாக்யவதி அமரேஷ் 2000 மூவர்ண தேசியக் கொடியை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக பாஜக வார்டு தலைவர் அஜித், பொதுச்செயலாளர் ரேவண சித்தய்யா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜு, விவசாய அணி மாநில சிறப்பு அழைப்பாளர் பிரதீப் ரெட்டி, பாஜக.முகந்தர் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இது குறித்து பாக்யவதி அமரேஷ் பேசுகையில், லட்சக்கணக்கான இந்தியர்களின் போராட்டத்தாலும், தியாகத்தாலும் இந்திய சுதந்திரம் கிடைத்தது (India’s freedom was achieved through struggle and sacrifice). இந்த நல்ல சந்தர்ப்பத்தில், உலகின் வலிமையான பிரதமர் நரேந்திர மோடி, ஆசாதி அமிர்த மஹோத்சவின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 11 முதல் 15 வரை 5 நாட்களுக்கு ஹர் கர் திரங்கா இயக்கத்தில் மூவர்ண தேசியக் கொடியை தங்களின் வீடுகளில் ஏற்றுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஹர் கர் திரங்கா இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஹோம்பேகவுடாநகர் வார்டில் 2000 ஆயிரம் மூவர்ண தேசியக் கொடியை (Tricolor national flag) ஒவ்வொரு வீட்டிற்கும் இலவசமாக வழங்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

சுதந்திரப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த மாண்புமிகு மாமனிதர்களின் முக்கிய செய்திகளை வீடுகள் தோறும் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் முதல் முறையாக ஹர் கர் திரங்கா (Har kar tiranga) ஒரு பெரிய இயக்கமாக செய்யப்படுகிறது என்றார்.