AIADMK party: அதிமுகவில் நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மீண்டும் பதவி – ஓபிஎஸ்

சென்னை: (O.Panneerselvam said AIADMK removed executives will be allowed again) அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 11ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒற்றை தலைமை பிரச்சனையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு மற்றும் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியிலிருந்து நீக்குவதாக பொதுக்குழு கூட்டத்திற்குப்பின் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையி்ல், தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் (O.Panneerselvam Statement), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் (Party All executives), அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும், ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதிக் கழகச் செயலாளர் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்கள் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு, ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள் மீண்டும் அந்தந்தப் பொறுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதையும், காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சியினர் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், தொகுதிக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அறிக்கையால் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.