சென்னை: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை (Extra Buses Running Today) முன்னிட்டு பலர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். அது போன்றவர்கள் பெரும்பாலோனர் ரயில்களிலும் பேருந்துகளிலும் பயணம் செய்வது வழக்கம்.
சாதாரண நாட்களை விட மக்கள கூட்டம் அதிகமாக இருப்பதால் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலான பேருந்துகளை இயக்க உள்ளது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (நேற்று) மாலை முதல் சென்னையில் இருந்து பலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறைகள் வருவதால் வெளியூர் செல்பவர்களின் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
அதே போன்று சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (கிறிஸ்துமஸ்) தொடர் விடுமுறை காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம், சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதற்காக இன்றும் கூடுதலான பேருந்துகளை இயக்க இருப்பதாக போக்குவரத்துக்கழகம் கூறியுள்ளது.
முந்தைய செய்தியை பார்க்க:Ayyappa Devotees Van Accident: குமுளி மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்; ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பலி
முந்தைய செய்தியை பார்க்க:People Carrying The Dead Body In Running Water:பாலம் இல்லாததால் ஓடும் தண்ணீரில் இறந்தவர் உடலை சுமந்து சென்ற பொதுமக்கள்



