EPS, OPS plan to meet PM Modi: பிரதமர் மோடியை சந்திக்க இபிஎஸ், ஓபிஎஸ் திட்டம்

சென்னை: Edappadi Palaniswami and O. Panneer Selvam are going to meet Prime Minister Modi: செஸ் ஒலிம்பயாட் போட்டியை துவக்கி வைப்பதற்காக இன்று சென்னை வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் (44th Chess Olympiad Tournament) பிரமாண்டமான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் (Nehru Indoor Stadium) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், தமிழக கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தமிழக முல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்க சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை சென்னை வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையார் ஐஎன்எஸ் விமான படைத் தளத்திற்கு செல்கிறார். இதனைத்தொடர்ந்து கார் மூலம் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு சென்று, செஸ் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்கிறார். இதனையடுத்து கார் மூலம் ஆளுநர் மாளிகைக்கு சென்று, இரவு அங்கேயே தங்குகிறார்.

மறுநாள் (29ம் தேதி) காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் (Anna University Graduation Ceremony) பங்கேற்றுவிட்டு, சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி மீண்டும் அகமதாபாத் செல்ல திட்டமிட்டுள்ளார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் இன்றும் நாளையும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு படை என 22,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தொடக்க விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் சென்னையில் இன்றும் நாளையும் டிரோன்கள், ஹைட்ரஜன் பலூன்கள் ஆகியவை பறக்க தடை போலீசார் தடை விதித்துள்ளனர். பிரதமர் வருகை குறித்து சமூவ வலைதளங்களில் தவறான கருத்து பதிவிடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சமூகவலைதளங்களை தீவிரமா கண்காணித்து வருவதாகவும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விழாவையொட்டி சென்னையில் உள்ள ராஜா முத்தையா சாலை, ஈ.வே.ரா பெரியார் சாலை, அண்ணாசாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையி்ல் செஸ் ஒலிம்பயாட் போட்டியை துவக்கி வைப்பதற்காக இன்று சென்னை வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சனையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்ககளும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மோதலில் ஈடுபட்டனர். இதனால் எம்ஜிஆர் மாளிகை சீல் வைக்கப்பட்டது. பின்னர் சீல் அகற்றப்பட்டுஅலுவலகம் எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அதிமுகவில் இரு அணியினரும் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதுமாக உள்ளதால் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதனிடையே குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கலின்போதும், பதவியேற்பு நிகழ்ச்சியின்போதும் ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டியை தொடங்கி வைக்க வியாக்கிழமை சென்னை வரும் பிரதமர் மோடி, இரவு ஆளுநர் மாளிகையில் தங்க உள்ளார். அங்கு முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பிரதமரை தனித்தனியாக சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.