Aadi amavasai: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆடி அமாவாசையொட்டி திரளாக குவிந்த பக்தர்கள்

கன்னியாகுமரி: large number of devotees Gathered in mukkadal : ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இன்று அதிகாலையிலேயே பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்து நீராடி வருகின்றனர். ஆடி அமாவாசையொட்டி வியாழக்கிழமை கடலில் நீராடி தங்கள் முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தனர்.

கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசை தினத்தில் பொது மக்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிகழாண்டு மாநிலத்தில் கரோனா விதிமுறைகளில் தளர்வுகள் (Relaxation in Corona norms) அறிவிக்கப்பட்டுள்ளதால் கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டுமின்றி, தமிழகத்தின் அருகே உள்ள‌ கேரள மாநிலத்தின் எல்லைகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் ஆடி அமாவசையொட்டி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்திருந்தனர்.

கடற்கரையில் சுமார் 200 க்கும் அதிகமான புரோகிதர்கள் அமர்ந்து பொதுமக்களுக்கு மந்திரம் ஓதி உயிர் நீத்த முன்னோர்களுக்கு (For deceased ancestors) நினைவு பலி கர்ம பூஜை களை செய்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கன்னியாக்குமரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆடி அமாவசையையொட்டி உயிரி நீத்த முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். இதனையொட்டி காவிரி ஓடும் மேட்டூர், ஒகனேக்கல் ஆகிய பகுதிகளிலும் மக்கள் நீராடி, சிறப்பு வழிபாடு செய்தனர். ஒகனேகல்லில் மக்கள் நீராட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனையொட்டி அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக மாவட்டம் முழுவதும் இருந்து கன்னியாகுமரிக்கு அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் (Special buses) இயக்கப் பட்டன. இதேபோல் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையிலும் ஏராளமான பொதுமக்கள் பலி கர்ம பூஜை செய்தனர். ஆடி அமாவாசை நாளில் காகத்திற்கு உணவு வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் உணவருந்தும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது நிஜமாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கும் என்பது பொதுவாக உள்ள நம்பிக்கை.

பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக முக்கிய‌மாக ஆறு நாட்களில் (Mainly in six days) முக்கியமான ஒன்று, ஆடி அமாவாசை ஆகும். இந்த நாட்களில் நாம் சில பொருட்களைத் தானமாக தர வேண்டும். பித்ருக்களின் முழு ஆசிர்வாதம் கிடைக்கும். தானியங்களை தானம் செய்வதால் லட்சுமி மற்றும் அன்னை அன்னபூரணி இருவருக்குமே ஆசிகள் கிடைக்கும், அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த நேரத்தில் தான் பித்ருக்கள், பூலோகத்திலிருந்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பிச் செல்வதாக நம்பப்படுகிறது.

எனவே, அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுக்கவும், நினைவில் கொள்ளவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவர்களின் பிள்ளைகளுக்கும், தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் (Get the blessings of ancestors) என நம்பப்படுகிறது. இந்த நாளில் நமக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைக்க வேண்டும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வேண்டுமென பிரார்த்திப்போம்.