Praveen Nettaru murder case : பிரவீன் நெட்டாரு கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் கைது?

முதற்கட்ட விசாரணையில், குற்றவாளிகள் கேரளாவை சேர்ந்தவர்கள் என தகவல் கிடைத்துள்ளதால், கேரளாவிற்கு சென்றுள்ள‌ போலீசார், வழக்கில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மங்களூரு: A person involved in the case was arrested : பாஜக, பஜ்ரங் தள் ஆகிய கட்சி, அமைப்புகளுடன் தொடர்புடைய பிரமுகர் பிரவீன் நெட்டாரு கொலை வழக்கு, ஒவ்வொரு இந்து ஆர்வலர் நெஞ்சிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை நம‌க்கும் இதே நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற வார்த்தைகளை காவி ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தலைவர்கள் உறுதியளித்தாலும், இந்த முறை எந்த இந்து ஆர்வலர்களும் அந்த உறுதிமொழிகளை நம்பத் தயாராக இல்லை. தங்கள் கோபத்தை வெளிப்படையாக காண்பித்து வருகின்றனர்.

பிரவீன் நெட்டாரு கொலை வழக்குக்குப் பிறகு, மக்கள் முன் அவமானத்தை சந்தித்து வரும் மாநில‌ பாஜக அரசு (State BJP Govt), மீண்டும் மாநில மக்களின் நம்பிக்கையைப் பெற வரலாறு காணாத சாகசத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்துமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு மாநில உள்துறை உத்தரவிட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், குற்றவாளிகள் கேரளாவை சேர்ந்தவர்கள் என தகவல் கிடைத்துள்ளதால், கேரளாவிற்கு சென்றுள்ள‌ போலீசார், வழக்கில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரவீன் நெட்டாரு கொலை வழக்கில் 7 சோஷியல் டெமாக்கரட்டிக் பார்டி ஆப் இந்தியா (SOCIAL DEMOCRATIC PARTY OF INDIA) அமைப்பினர் உட்பட 15க்கும் அதிகமானவர்களிடாம் போலீசார் ஏற்கனவே விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளி என கூறப்படும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரவீன் நெட்டாரைக் கொல்ல பைக்கில் வந்த மூன்று குற்றவாளிகளில் ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் பெல்லாரேவை சேர்ந்தவர் என உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, பைக்கில் வந்த மேலும் இருவர் பற்றிய தகவல்களை போலீசார் சேகரித்து உள்ளதாகவும், அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் (2 people from Kerala) என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து காவல் துறையிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. செவ்வாய்கிழமை இரவு 8:30 மணியளவில் பிரவீன் நெட்டாரு கோழிக்கடையை மூடிவிட்டு, வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தப் இருந்தபோது, ​​மோட்டார் சைக்கிலில் வந்த மர்மநபர்கள் வீச்சரிவாளால் வெட்டி பிரவீனை நெட்டாருவை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற‌னர்.

பாஜக மாவட்ட இளைஞர் அணியைச் சேர்ந்த இந்து ஆர்வலர் பிரவீன் நெட்டாருவின் மரணம் இந்து ஆர்வலர்களின் ஆத்திரத்தை அதிகரித்துள்ளது. பாஜக அரசுக்கு எதிராக இந்து ஆர்வலர்கள் (Hindu activists against BJP ) கொந்தளித்துள்ளனர். சொந்த நாட்டிலேயே நமக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் பாஜக அரசை ஆதரிப்பதால் என்ன பயன் என்பது இந்து ஆர்வலர்களின் கேள்வி. எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் பாஜக தலைவர்கள் மௌனமாக உள்ளனர்.

பிரவீன் நெட்டாரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை 24 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று பிரவீண் நெட்டாருவின் மனைவி பாஜக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசின் ஓராண்டு நிகழ்ச்சியையொட்டி மக்கள் திருவிழா (ஜனோத்ஸவா) கொண்டாடவிருந்த அரசு, பிரவீண் நெட்டாருவின் கொலைக்கு பிறகு அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து (Cancel all events) செய்து விட்டு, விசாரணையில் அதிகம் கவனம் செலுத்தி வருகிற‌து.

பிரவீன் நெட்டாரு கொலை வழக்கு தொடர்பிலான விசாரணைகள் குறித்து உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா (Home Minister Araka Gnanendra) தெரிவித்ததுடன், சந்தேகத்தின் பேரில் 15க்கும் மேற்பட்டோர்களிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து பெங்களூரில் பேசிய அவர், கேரள எல்லையில் பிரவீன் நெட்டாருவின் குடியிருப்பு உள்ளது. எனவே கேரளாவைச் சேர்ந்த சிலர் இந்தச் செயலைச் செய்துவிட்டு, மீண்டும் கேரளாவுக்குச் சென்று தலைமறைவாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறோம். எனவே இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய‌ கேரள காவல்துறையின் ஒத்துழைப்பும் தேவை உள்ளது. இந்த வழக்கில், அம்மாநில காவல் துறை சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

மேலும் மங்களூரில் இந்து ஆர்வலர்களின் கோபம் (Anger of Hindu activists) குறித்து பேசிய அவர், இந்து அமைப்புகளுக்கு பிரவீன் மதிப்புமிக்க சொத்து என்றும் கூறினார். அதனால் ஆர்வலர்கள் கோபமடைந்துள்ள‌து இயல்பு. மங்களூரு மக்கள் அமைதியை விரும்புபவர்கள் மற்றும் புத்திசாலிகள். ஆனால்,அவர்களில் ஒருவரை இழந்துள்ளதால், வருத்தமும் கோபமும் வருவது சகஜம்தான் என்றார்.