Voter ID Card: இனி 17 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் அட்டை

புதுடில்லி: Now everyone who has completed 17 years of age is a voter card: 17 வயது நிரம்பியவர்கள் இனி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது நடைமுறையாக உள்ளது. இதனால் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்க தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கும் நிலை இருந்து வந்தது. இதற்காக ஆதார், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களும் சமர்பிக்க வேண்டும். அதனை தேர்தல் ஆணையம் சார்பில் அதனை சரிபார்த்து பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும்.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான புதிய நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை பதிவுசெய்ய முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம். இதனால் ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி 18 வயதை அடைந்திருக்க வேண்டும் என காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும், இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் 1ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான (Link Aadhaar Number with Voter ID Card) வழிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையொட்டி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது.

இதனிடையே, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court Of India) மனு தாக்கல் செய்தார். அதில், விரைவில் மூன்று மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், ஆதார் உடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது, குடிமக்களின் அந்தரங்க பாதுகாப்பை வலியுறுத்தும் அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக உள்ளது.

தேர்தல் ஆணைய சட்ட திருத்தத்தின், 4 மற்றும் 5ம் பிரிவுகள் அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் உள்ளதாக, இந்த சட்ட திருத்தம் செல்லாது என உத்தரவிட வேண்டும். ஆதார் உடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கு (Link Aadhaar Number with Voter ID Card) தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர், தேர்தல் ஆணைய சட்ட திருத்தத்தை எதிர்க்கிறார். இதற்காக அவர் தில்லி உயர் நீதிமன்றத்தை (Delhi High Court) நாடாமல் இங்கு ஏன் வர வேண்டும்? மனுதாரர் டில்லி உயர் நீதிமன்றத்தை நாடி தீர்வு காணலாம் என மனுவை தள்ளுபடி செய்து அமர்வு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.