Saalumarada Thimmakka : சாலுமரத‌ திம்மக்காவிற்கு அமைச்சருக்குரிய‌ அந்தஸ்து: கர்நாடக அரசு அறிவிப்பு

அண்மையில் சாலுமரத திம்மக்காவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதனையொட்டி சாலுமரத திம்மாகாவிற்கு அமைச்சருக்கு உரிய‌ அந்தஸ்து வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்திருந்தது.

பெங்களூரு: Saalumarada Thimmakka : வரிசையாக மரங்களை நட்டு புகழ் பெற்ற பசுமைப் பிரியரான‌ சாலுமரத திம்மக்காவின் சாதனைகளைப் பாராட்டும் வகையில் அவரை சுற்றுச்சூழல் தூதராக நியமித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு இந்தப் பதவிக்கு அமைச்சருக்கு உண்டான அந்தஸ்தையும் வழங்கி உள்ளது.

அண்மையில் சாலுமரத திம்மக்காவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதனையொட்டி சாலுமரத திம்மக்காவிற்கு அமைச்சருக்கு உரிய‌ அந்தஸ்து வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து தற்போது சுற்றுச்சூழல்தூதுவராக நியமிக்கப்படுவதோடு, மறு உத்தரவு வரும் வரை அமைச்சருக்கு உண்டான அந்தஸ்தையும் வழங்கி உள்ளது.

சுற்றுச்சூழலை நேசித்த‌தற்காக‌ சாலுமரத திம்மாகாவிற்கு இந்த‌ கௌரவம் கிடைத்துள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகள் சாலுமரத திம்மக்காவை கௌரவித்துள்ளன. மாநில அரசும் தனது உயரிய பல விருதுகளை சாலுமரத திம்மக்காவிற்கு வழங்கியுள்ளது. கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற சாலுமரத திம்மக்காவை சுற்றுச்சூழல் தூதராக நியமித்துள்ளது.

தும்கூர் மாவட்டம் குப்பி தாலுக்காவில் உள்ள ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த சாலுமரா திம்மக்காவிற்கு கல்வியறிவு இல்லை. பள்ளி படிக்கட்டில் ஏறாத திம்மக்கா, படிக்காதவராக இருந்தாலும் சுற்றுச்சூழல் மீது உள்ள அக்கறையால் மரக் கன்றுகளை நட்டு வளர்த்தார். தனக்கு குழந்தை இல்லை என்பதால் சாலுமரத திம்மக்கா, மரங்களை குழந்தைகளாக நினைத்து வளர்த்தார். இதனால் சாலுமரத திம்மகா நாடு முழுவதும் பிரபலமடைந்தார்.

முறையான கல்வியைப் பெறவில்லை என்றாலும் சுற்றுச்சூழலில் அக்கறை கொண்டிருந்த சாலுமரத திம்மக்கா கல்குவாரியில் சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்துக் கொண்டே கணவரின் உதவியுடன் ஹூலிகலில் இருந்து குதூர் வரையிலான‌ 45 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலையில் 385 ஆலமரங்கள் உள்பட‌ ஏறக்குறைய 8 ஆயிரம் மரங்களை நட்டுள்ளார்.