Actor Vikram Admitted To Hospital : நடிகர் விக்ரமிற்கு இதயத்தில் பிரச்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

Actor Vikram : நடிகர் விக்ரமிற்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை : Actor Vikram Admitted To Hospital Over Health Issue இவருக்கு வெள்ளிக்கிழமை திடீரென இதயத்தில் பிரச்னை ஏற்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சென்னை : தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவரும், பாடகருமான விக்ரமிற்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டத்தையடுத்து அவர் சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் விக்ரமுக்கு 56 வயதாகிறது. இந்த காரணத்திற்காகவே அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை 6 மணிக்கு நடிகர் விக்ரம் நடித்து வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற இருந்தார்.

நடிகர் விக்ரம் ரசிகர்களால் சியான் விக்ரம் என்று செல்லமாக அழைக்கப்பட்டார். அவரது சொந்தப் பெயர் கெனடி ஜான் விக்டர் (கென்னி). தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். நடிகர் விக்ரம், தேசிய விருது, ஏழு பிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் 2004-இல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.

நடிகர் விக்ரம் 1990-இல் தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார். ஆனால் இவர் நடிப்பு வாழ்க்கைக்கு புகழ் கொடுத்த படம் சேது. 1999-இல் திரைக்கு வந்த சேது திரைப்படம் . இந்த படத்திற்காக விக்ரம் 20 கிலோ எடையை குறைத்து, தலையை மொட்டை அடித்துக் கொண்டார். சேது படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெமினி, சமுராய், தூள், காதல் சடுகுடு, சாமி, பிதாமகன், அருள், அண்ணன், பீமா, ராவணன், தெய்வத் திருமகள், டேவிட், இருமுகன் மற்றும் மகான் உள்ளிட்ட பல வெற்றிப்பட‌ங்களில் விக்ரம் நடித்துள்ளார்.