Shoes and socks : பள்ளி மாணவர்களுக்கு காலணி, காலுறை வழங்க நிதி ஒதுக்க ஒப்புதல்: முதல்வர் பசவராஜ் பொம்மை

132 crores will release : எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளிடையே அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணி, காலுறை வாங்குவதற்கு ரூ.132 கோடி நிதியை ஒதுக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பெங்களூரு : Shoes and socks : பள்ளி மாணவர்களுக்கு காலணி, காலுறை வழங்க நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளில்1 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இம்முறை காலணி, காலுறை கிடைப்பது சந்தேகம் என கூறப்பட்ட நிலையில், நிதித்துறையின் எதிர்ப்பை மீறி மாநில அரசு காலணி, காலுறை வழங்க நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் காலணி, காலுறை வாங்க நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் நிகழாண்டு மாணவர்களுக்கு இம்முறை காலணி, காலுறை இல்லை என கூறப்பட்டது.

ஆனால் இந்த குழப்பங்களுக்கு எல்லாம் திரை போடும் வகையில் பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியது: பள்ளி மாணவர்களுக்கு சீருடை வாங்குவதற்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணி, காலுறை வாங்குவதற்கு ரூ.132 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் யாரும் குழப்பத்தை ஏற்படுத்தத் தேவையில்லை என்று கூறி எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்துள்ளார்.

மாநில அரசு 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்களையும், 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலணி மற்றும் காலுறை வழங்கி வந்தது. ஆனால் இந்த திட்டம் 2019-20 ஆம் ஆண்டிலிருந்து கைவிடப்பட்டது. இப்போது பொம்மை தலைமையிலான மாநில அரசு இத்திட்டங்களுக்கு புத்துயிர் அளித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில்1 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இம்முறை காலணி, காலுறை கிடைப்பது சந்தேகம் என கூறப்பட்ட நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், குழந்தைகளுக்கு காலணி, காலுறை வாங்க அரசிடம் நிதி இல்லை என்றால், காங்கிரஸ் சார்பில் பிச்சை எடுத்து நிதி வசூலித்து, பள்ளி மாணவர்களுக்கு காலணி, காலுறை வாங்க நிதி அளிப்போம் என்று கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, கரோனா காலத்திலும் பிச்சை எடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி அளிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். அப்போது பிச்சை எடுத்து வசூலித்த நிதி எங்கே போனது என்பதனை காங்கிரஸ் கட்சியினர் கூற வேண்டும் என்றார்.